கோவையைச் சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று மொத்தம் 39 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பல்வேறு பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்திய இந்த குட்டீஸ்களின் வெற்றி, கோவை மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியின் பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளதாக பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இளம் வயதிலேயே தேசிய அரங்கில் முத்திரை பதித்துள்ள இவர்களின் சாதனை, மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Recommended Videos