திண்டுக்கல்லில் 26 டாஸ்மாக் கடைகளை மூடும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மதுபான பார்களையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் மற்றும் மருத்துவமனை போன்ற பொதுமக்களைப் பாதிக்கும் இடங்களில் உள்ள அரசு மதுபான கடைகள் அகற்றப்படும் எனப் புதிய தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 26 கடைகள் மூடப்பட உள்ளன. இதில் குறிப்பாகக் கோயில் நகரமான பழனியில் மட்டும் 5 அரசு மதுபான கடைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அரசு கடைகளை அகற்றும் அதே வேளையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள தனியார் மதுபான பார்களை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. பழனி

See more

Recommended Videos