உலகளாவிய முதலீடுகளை ஈர்த்து வரும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, பன்னாட்டுத் தரத்திலான புதிய விமான நிலையக் கட்டமைப்பு மிக அவசியத் தேவையாக மாறியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படாவிட்டால், தமிழகத்தின் ஒட்டுமொத்த வணிகமும் முதலீடுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பு (CII) எச்சரித்துள்ளது.
குறிப்பாக ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறைகளில் அசுர வளர்ச்சி கண்டு வரும் கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்கள், தற்போது தங்களின் முழுச் செயல்பாட்டுத் திறனையும் தாண்டி இயங்கி வருகின்றன. ஓடுதளங்களின் நீளம் குறைவு, பன்னாட்டு விமானங்களை நிறுத்துவதற்கான இடவசதி பற்றாக்குறை மற்றும் சரக்குக் கையாளுதல் (Cargo) தடைகள் ஆகியவை தற்போதைய முக்கியச் சவால்களாக