பெட்ரோல் டீசல் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3.90 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. நீண்ட காலமாக விலையேறாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் கடந்த மே 15ஆம் தேதி ரூ.3 அளவுக்கு உயர்ந்தது, பின்னர் நேற்று சற்று விலை உயர்ந்தது. இந்தத் திடீர் விலை மாற்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுபோல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்ய, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை தினசரி மாறும்போது, அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவும் நிலையற்றதாக மாறும். இது காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைக்கான பொருட்களின்