நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது அரசியல் வருகை குறித்து வீடியோ ஒன்றின் மூலம் ரசிகர்களுடன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற தாரக மந்திரத்தைக் குறிப்பிட்டு, உழைப்பவருக்கே உண்மையான பலன் கிடைக்கும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் விளக்கினார்.
தான் செய்து வரும் சமூக சேவைகளே தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் எனக் கூறிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது செய்த உதவிகளையும் நினைவுகூர்ந்தார். ஆரம்பத்தில் தனது தாய், “அரசியல் ஒரு சாக்கடை” எனக் கூறி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக லாரன்ஸ் ஓப்பனாக ஒப்புக்கொண்டார்.
ஆனால், சமீபத்திய அரசியல் மாற்றங்களும், தளபதி விஜயின் அரசியல் வருகையும் அவரது தாயின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதால், தற்போது அவர்