கோவையில் உள்ள அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தில் சில இளைஞர்கள் பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனால் சாப்பிடும் போது, அந்த பர்கரில் புழுக்கள் நெளிந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட பர்கருக்கு மாற்றாக மற்றொரு பர்கரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து கடும் அதிருப்தி அடைந்த இளைஞர்கள், இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி, உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை

See more

Recommended Videos