சிவகங்கை மாவட்டத்தில் காரையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் அஸ்வின், அருகிலுள்ள திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தவர். பள்ளி திறந்த நாளில் பள்ளிக்கு சென்றதாக கூறப்பட்ட அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கீழக்காவனூர் கண்மாய் பகுதியில் மாணவன் சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், சிறுவனுக்கு 24 வயது அரவிந்த் , 22 வயது கணேசன் மற்றும் அஜய் ஆகியோருடன் மஞ்சுவிரட்டு நிகழ்வுகள் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. பின்னர் நண்பர்கள் நால்வரும் பள்ளி விடுமுறை