முடிந்தால் கம்ப்ளைன்ட் கொடு... டாஸ்மாக்கில் அராஜகம்

முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பிறகு, கோவில், பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி அது தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. ஒரு மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.30 வரை வசூலிக்கப்படுவதாக மது வாங்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பல்லாவரம், சங்கர் நகர் பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகவும், இது அதிகாரிகளுக்கு தெரியாமலில்லை என்றும் கூறப்படுகிறது. “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை” என்ற முதலமைச்சர் விஜய்யின் பேச்சு தற்போது நடைமுறையில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Recommended Videos