தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் நண்பர்களுடன் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். அது முடிந்து வீடு திருப்பிக்கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அவர்களது வாகனத்தை நிறுத்தி ஆயுதம் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தங்கச் சங்கிலியை பறித்ததுடன், அவர்களை நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் அப்பெண்களை புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதேபோல், கிரிவலத்தில் பங்கேற்ற மற்றொரு இளம் பெண்ணையும் அவரது நண்பரையும் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி, நகைகளை பறித்து பணம் கேட்டு மிரட்டியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இரண்டு சம்பவங்களும் ஒரே நேரத்தில் பதிவானதால்,