திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆந்திர பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்து தருவதாக கூறி இளைஞர் ஒருவர் 6 நபர்களிடம் தலா 1000 என 6000 பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அழைத்து வந்த போது அதிகாரிகளிடம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது, கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்காக ஏமாற்றி அழைத்து வந்த இளைஞரை புகைப்படம் எடுக்க முயற்சித்த பொழுது கோவிலில் பல்வேறு இடங்களில் சுற்றி இளைஞர் அங்கிருந்து தப்பித்தார். இதுகுறித்து கோவில் இணை ஆணையர் பரணிதரன் சிசிடிவி காட்சிகளுடன் அண்ணாமலையார் கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அண்ணாமலையார் கோவில் காவல் நிலைய போலீசார் கோவில் இணை ஆணையர் கொடுத்த புகாரின்