நவம்பர் மாதம் இறுதியில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் பேருந்து நிலையம் திறக்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.