இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை போலவே யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும் சில மூலிகை இலைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வேப்பிலையில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன.
ஆயுர்வேத மூலிகைகளில் மிகவும் பிரபலமான சீந்திலில் ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இதை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் வீக்கம் குறைகிறது
கொத்தமல்லி உட்கொள்வதால் இரத்த சுத்திகரிப்பு வேகமாக நடக்கின்றது. யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியில் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் அழற்சி சிந்திப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. துளசியை அப்படியே சாப்பிட்டாலும் கஷாயமாக செய்து குடித்தாலும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய உதவி கிடைக்கும்.
வெந்தக்கீரையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை சீராக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. வெந்தயக்கீரை உட்கொள்வதால் நச்சுக்கள் எளிதாக உடலை விட்டு வெளியேறி யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய உதவி கிடைக்கிறது.
லெமன் கிராசில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உ
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.