)
11 A Seat Mystery: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 போயிங் 787 - 8 Dreamliner வகையைச் சேர்ந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்தனர். அதில் ஒருவரை தவிர அனைவருமே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இருப்பினும் விபத்துக்கான காரணம் இன்று உறுதியாகவில்லை.
11 A Seat Mystery: விபத்தில் தப்பிய விஸ்வாஸ் குமார் ரமேஷ்
விமானத்தில் இந்தியர்கள் 169 பேர் பயணித்தனர். அவர்களுடன் 53 இங்கிலாந்து பயணிகள், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் என 230 பயணிகள் இருந்தனர். இதில் விமானத்தின் 11 A இருக்கையில் அமர்ந்திருந்த இங்கிலாந்து குடிமகனான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
அவர் அமர்ந்திருந்த 11 A இருக்கை அவசர வெளியேற்றத்திற்கான கதவுக்கு அருகே அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்த போது அவசர கால கதவு உடைந்து திறந்ததாகவும், அதில் இருந்து குதித்து தப்பியதாக விஸ்வாஸ் குமார் விபத்துக்கு பின் நினைவுக்கூர்ந்தார்.
11 A Seat Mystery: 1998ஆம் ஆண்டு சம்பவம்
அப்படியிருக்க, தற்போது 11 A இருக்கை அதிர்ஷ்டகரமானது என விமான பயணிகள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். காரணம், 1998ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த விமான விபத்தில் இதே 11 A அமர்ந்திருந்த நபர் உயிர் தப்பி உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 1998ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தாய்லாந்தில் தாய் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது நிலைதடுமாறி ஒரு சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 146 பேரில், 101 பேர் உயிரிழந்தனர். 45 பேர் பிழைத்துக் கொண்டனர். அவர்களில், '11 A' இருக்கையில் அமர்ந்து இருந்த தாய்லாந்து பாடகர் ருவாங்சாக் லோய்ச்சுசக்கும் ஒருவர். இந்த தகவலை பாடகர் ருவாங்சாக் தற்போது உறுதி செய்தார்.
11 A Seat Mystery: தாய்லாந்து பாடகர் சொன்னது என்ன?
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "இந்தியாவில் நடந்த விமான விபத்தில் இருந்து உயிர் தப்பியவர் '11 A' இருக்கையில் அமர்ந்து உள்ளார். அதேபோல் நானும் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய போது அதே இருக்கை எண்ணில் (11 A) தான் பயணம் செய்தேன்" என பதிவிட்டுள்ளார். இதுபோன்ற காரணங்களால் விமானத்தில் 11 A ராசியானதாகவும் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
11 A Seat Mystery: ஐரோப்பியர்கள் வெறுக்கும் 11 A சீட்
ஆனால் 11A இருக்கை பெரும்பாலான ஐரோப்பிய பயணிகளால் வெறுக்கப்படது என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஐரோப்பாவில் அதிகமாக இயக்கப்படும் Boeing 737 ரக விமானங்களும், தற்போது விபத்துக்குள்ளான Boeing 787 விமானங்களைப் போலவே இருக்குமாம். அந்த விமானங்களில் 11 A இருக்கை சொகுசு வகுப்புக்கு அடுத்தபடியாக, எகனாமி வரிசையின் முதல் இருக்கையாக இருக்குமாம்.
ஜன்னலை ஒட்டி இருக்கும் இந்த இருக்கையை பெரும்பாலான ஐரோப்பியர்கள் விரும்புவதில்லையாம். காரணம் அந்த இருக்கை அமைந்திருக்கும் இடம் வசதியாக இருக்காது, இருக்கையை மடக்கி ஓய்வெடுப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் பெரும்பாலான ஐரோப்பிய பயணிகள் அந்த இருக்கையை தவிர்த்து விடுவார்களாம். அதனால் 11 A வெறுக்கப்படும் இருக்கையாக இருக்கிறது. ஆனால் அந்த இருக்கை தான் விஸ்வாஸ் குமார் ரமேஷின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ