)
2 Year Old Girl Becomes Living Goddess : இந்துக்கள் அதிகம் இருக்கும் நாடாக இருக்கிறது, நேபாளம். இங்கு, சில வித்தியாசமான வழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு பழக்கம் குறித்த செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடவுளான 2 வயது குழந்தை!
காத்மாண்டுவில் தனது பெற்றோருடன் தங்கியிருந்த குழந்தை ஒன்றுதான், தற்போது வாழும் தெய்வமாக மாற்றப்பட்டுள்ளது. அவரை, காத்மாண்டுவில் இருக்கும் கோயிலுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமையன்று விழா ஏற்பாடு செய்து அழைத்து சென்றுள்ளனர். இந்த விழா, நேபாள நாட்டின் மிகப்பெரிய விழாவாகவும், அதிக நேரம் நடக்கும் விழாவாகவும் கருதப்படுகிறது.
அந்த குழந்தையின் பெயர், அர்யாதரா ஷகாயா. இவருக்கு 2 வயது 8 மாதம் வயதாகிறது. கடவுளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த குழந்தையை இவர்கள் “குமாரி” என்று குறிப்பிடுகின்றனர். இவரை கன்னித் தெய்வம் என்றும் அழைக்கின்றனர். இந்த குழந்தை வயது வந்த பின்பு, சாதாரண ஆளாக கருதப்படுமாம்.
எப்படி தேர்ந்தெடுக்க படுகிறார்கள்?
காத்மாண்டுவில் உள்ள பள்ளத்தாக்கை பூர்வீகமாக கொண்ட ‘நேவர்’ சமூகத்தில் இருக்கும் சாக்கிய வழியில் இருந்து இப்படி குமாரிக்கள் தேர்ந்தெடுக்க படுகின்றனர். இவர்கள், பெரும்பாலும் இந்து தேசத்தில் இந்துக்கள் மற்றும் பௌத்த மதத்தை சேர்ந்தவர்களால் மதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர்.
இப்படி தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகள், 2-4 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளாக இருக்கின்றனர். அது மட்டுமன்றி, அவர்கள் அழகிய சருமம் கொண்டவர்களாகவும், தலைமுடி, கண்கள் மற்றும் பற்களில் எந்த குறைகளும் இல்லாதவர்களாகாவும் இருக்க வேண்டுமாம். இருட்டை பார்த்து பயப்படாத குழந்தைகளாகவும் இருக்க வேண்டுமாம்.
இந்த மாதத்தில் ஆரம்பிக்கும் இந்திர ஜாத்ரா என்கிற விழாவின் போது, முன்னாள் குமாரி பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு இந்த தெய்வக்குழந்தை சுற்றி வரப்பட்டார். அதே போல, குமாரிக்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எப்போதும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, தலைமுடியை உயர்த்தி கட்டிக்கொண்டு, நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண் வரையப்பட்டவராக இருப்பார்களாம்.
இந்த பண்டிகை தீபாவளி பண்டிகையின் தொடக்க பண்டிகையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விழாவினை, நேபாள மக்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ