200 Year Old Condom: 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஒன்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணுறை குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.

200 Year Old Condom: குடும்ப கட்டுப்பாட்டில் ஆணுறை முக்கிய பங்கை வகிக்கிறது. ஆண், பெண் இருவருக்குமே ஆணுறை குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் என மருத்துவ உலகம் தொடர்ந்து பேசி வருகிறது. குடும்ப கட்டுப்பாட்டுக்கு மட்டுமின்றி, பல்வேறு பால்வினை நோய்களை தடுப்பதிலும் ஆணுறை பாதுகாப்பு அளிக்கும் எனலாம்.
200 Year Old Condom: 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை
இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் இன்னும் ஆணுறை முழுமையாக கூட சென்றடையாத நிலையில், 200 ஆண்டுகளுக்கு முன்னரே நெதர்லாந்தில் ஆணுறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த ஆணுறை குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
நெதர்லாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியத்தில் வைக்கப்பட்ட இந்த புதிய மற்றும் வினோதமான பொருள்தான் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆணுறையில் ஆபாச ஓவியம் ஒன்றும் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியம் புகழ்பெற்ற ஆம்ஸ்ட்ரடாம் ரெட் லைட் பகுதியின் ஓவியம் போல் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
This is a 200-year-old condom in the Rijksmuseum, depicted with a nun and three priests. pic.twitter.com/tKYCMDGHCb
— Manish Patel (@ProfManishPatel) June 6, 2025
200 Year Old Condom: 8 இன்ச் அளவில் உள்ள ஆணுறை
Safe Sex? என்ற பெயரில் 19ஆம் நூற்றாண்டில் பாலியல் தொழில் குறித்து நடைபெற்ற கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த ஆணுறை காட்சிப்படுத்தப்ப்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (ஜூன் 3) இந்த கண்காட்சி தொடங்கி இருக்கிறது. 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆணுறை என்பது விபச்சார விடுதியின் நினைவுப் பொருளாக இருக்கலாம். அதில் ஒரு கன்னியாஸ்திரி மற்றும் மூன்று மதகுருமார்கள் ஆபாசமாக இருக்கும் வகையிலான ஓவியம் இடம்பெற்றிருக்கிறது.
அந்த ஆணுறை சுமார் 8 இன்ச் அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆணுறை இத்தனை ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணுறையில் UV சோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் இந்த ஆணுறை பயன்படுத்தப்படாத ஒன்று என்பதும் கண்டறியப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
200 Year Old Condom: ஓவியமும், எழுத்தும்...
இதுகுறித்து நெதர்லாந்தின் தேசிய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் ஜாய்ஸ் ஜெலன் என்ற பெண்மணி கூறுகையில், "அந்த காலகட்டத்தில் கவுண்டரில் ஆணுறைகள் விற்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆணுறையின் அச்சு மற்றும் நீட்டிக்கப்பட்ட நீளமும் என்பது 20 சென்டிமீட்டர் (7.9 அங்குலம்) ஆக உள்ளது. இது ஒரு ஆடம்பரமான விபச்சார விடுதியின் நினைவுப் பொருள் என்பதையும் குறிக்கிறது" என்றார்.
இந்த நோய்த்தடுப்பு ஆணுறை 1830ஆம் ஆண்டு வாக்கில், ஒரு செம்மறி ஆடுகளின் தேவையற்ற உடல் பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 'Voilà mon choix' என அதில் எழுதப்பட்டிருக்கிறது, அதாவது 'இது என் இஷ்டம்' என ஆணுறையின் ஓரத்தில் பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டிருககிறது.
200 Year Old Condom: பிரம்மச்சாரியத்தை கேலிக்குள்ளாக்கும் வசனம்
Voilà mon choix என்பது கிரேக்க புராணத்தின் Judgement Of Paris நிகழ்வையும், பிரம்மச்சாரியத்தையும் கேலிக்குள்ளாக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம் என அருங்காட்சியகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Judgement Of Paris என்பது அப்போது பாரீஸின் இளவசராக இருந்த Trojan Prince மூன்று பெண் தெய்வங்களில் யார் மிக அழகானவர்கள் என்பதை தேர்வு செய்யும் நிகழ்வாகும். இந்த முடிவே Trojan போருக்கு வழிவகுத்தது.
200 Year Old Condom: சிலிபிஸ் நோயில் இருந்து பாதுகாக்க...
இந்த வகையான ஆணுறை பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் கூட, இது ஆணுறை அணிபவரை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டவை ஆகும். இவை தேவையற்ற கர்ப்பம், சிபிலிஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளில் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்க உருவாக்கப்பட்டிருக்கலாம். சிபிலிஸ் நோய் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெரும் பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த ஆணுறையை அருங்காட்சியகம் ஏலத்தில் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இது அருங்காட்சியகத்தின் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை வரும் நவம்பர் மாதம் இறுதி வரை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ