பெண்களுக்கு போதிய பாதுக்காப்பு இல்லை, பாலியல் வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடி வரும் நிலையில், 18 கோடிக்கு ரூபாய்க்கு இளம் பெண் ஒருவர் தனது கன்னித்தன்மையை விற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கற்பை விற்ற இளம் பெண்
வறுமையின் காரணமாக பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதுவும் தவறு, எந்த பெண்ணும் பணத்திற்காக தன்னை விற்க கூடாது, அரசு அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் வைத்து வருகின்றனர். இச்சூழலில், போதாகுறைக்கு சமூக வலைத்தளம் மூலமும் விபச்சாரங்கள் செய்தி வருகின்றனர் சிலர்.
இந்த நிலையில் தான், இங்கிலாந்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனது கன்னித்தன்மையை பணத்திற்காக விற்றுள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை (The University of Manchester) சேர்ந்தவர் லாரா. இவர் தனது கன்னித்தன்மையை (virginity) எஸ்கார்ட் ஏஜென்ஸி என்ற பிளாட் ஃபார்ம் மூலம் ஏலம் விட்டுள்ளார். இந்த ஏலத்தில் அரசியல்வாதிகள், பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: ஒரு காலில் ஜீன்ஸ்-இன்னொரு காலில் டவுசர்! என்னங்க டிரெண்ட் இது?
ஏலத்தில் அடித்துக்கொண்டு வாங்கிய பிரபல நடிகர்
பலரும் லாராவின் கன்னித்தன்மைக்காக அடித்துக்கொண்ட நிலையில், பிரபல ஹாலிவுட் நடிவர் ஒருவர் ரூபாய் 18 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. பிரைவஸியின் காரணமாக லாரா அந்த நடிகரின் பெயரை வெளியிடவில்லை. இது தொடர்பாக பேசி உள்ள இளம் பெண் லாரா, குடும்பத்தின் வறுமை காரணமாகவும் பணத்தேவை அதிகமாக இருந்ததன் காரணமாகவும் தனது கன்னித்தன்மையை விற்றதாக கூறியுள்ளார். மேலும், இதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பணத்திற்காக வெர்ஜினிட்டியை விற்பதா?
நவீன உலகில் வளர்ந்து வரும் இளைஞர்கள், நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று யோசிக்க வேண்டும். தற்போது உள்ள டெக்னாலஜியை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டியவர்களே இப்படியான ஒரு ஏலத்தில் பங்கு பெற்று இளம் பெண்ணின் கன்னித்தன்மையை வாங்கி உள்ளது உழைத்து நன்றாக வாழ வேண்டும் என எண்ணும் பலருக்கு இது தவறான உதரணமாக மாறிவிடும் என இச்செயலில் ஈடுபட்டவர்களை இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
மேலும் படிங்க: 104 குழந்தைகள், 144 பேரப்பிள்ளைகள், 20 மனைவிகள்-யாரு ராசா நீ? வைரல் செய்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









