டிக் டாக் லைவ்-ன் போது இளம் பெண் சுட்டுக்கொலை.. மெக்சிக்கோவில் அதிர்ச்சி!

மெக்சிக்கோ நாட்டில் 23 வயது பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : May 15, 2025, 04:50 PM IST
  • மெக்சிக்கோவில் வலேரியா என்ற பெண் சுட்டுக்கொலை
  • டிக் டாக் லைவ்-ன் போது நடந்த கொடூரம்
டிக் டாக் லைவ்-ன் போது இளம் பெண் சுட்டுக்கொலை.. மெக்சிக்கோவில் அதிர்ச்சி!

வட அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ளது மெக்சிக்கோ. இந்நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தை சேர்ந்தவர் வலோரியா மார்க்வெஸ். இவரது வயது 23. குவாடலஜாரா பெருநகரப் பகுதியில் சபோபனில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் வலோரியா மார்க்வெஸ் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு டிக் டாக்கில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்கள் உள்ளனர். 

இவர் தனது டிக் டாக் பக்கத்தில் அழகு குறிப்புகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், ஜாலிஸ்கோவில் என்ற இடத்தில் உள்ள ஓர் அழகு நிலையத்தில் அழகு சாதன பொருட்கள் குறித்து தனது டிக் டாக் பக்கத்தின் மூலம் நேரலையில் பேசி உள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்த அழகு நிலையத்திற்குள் நுழைந்து வலேரியா நேரலையில் இருந்தபோதே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

முதலில் வலேரியாவின் வயிற்றில் சுற்ற அவர்கள், பின்னர் தலையில் இரண்டு முறை சுட்டுள்ளனர்.இதில் வலேரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், வலேரியா நாற்காலி ஒன்றில் அமர்ந்து அவரது மடியில் ஒரு பொம்மையை வைத்திருப்பதும், பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மார்பையும் வயிற்றையும் பிடித்தப்படி சரிந்து வீழ்வதும், அந்த வீடியோவின் முடிவில் மற்றொரு பெண்ணின் முகமும் காணப்படுவது பதிவாகி உள்ளது. 

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மெக்சிக்கோவில் இதுபோன்ற சம்பவங்கள் சமீப  காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நேரடி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் மேயர் வேட்பாளர் யெசெனியா லாரா குட்டியரெஸ் உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பிரபல அழகி வலேரியா மார்க்வெஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. 

மேலும் படிங்க: Viral Video: சொந்த நாட்டையே கிழித்தெடுக்கும் பாகிஸ்தான் நபர்... இந்தியாவுக்கு ஆதரவு!

மேலும் படிங்க: சுனாமியை வர வைக்கும் பயங்கர ஆயுதம்... இந்த 2 நாடுகளிடம் மட்டுமே இருக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News