ஆணுறுப்பை அறுத்த மனைவி... 67 வயது கணவர் கொடூர கொலை - நடந்தது என்ன?

World Bizarre Crime: 67 வயது கணவனின் ஆணுறுப்பை அறுத்து, கழுத்தில் பல முறை குத்தி 55 வயது மனைவி கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் ஸ்பெய்ன் நாட்டில் நடந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 2, 2026, 10:39 AM IST
  • உடனடியாக அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
  • பெண்ணும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
  • பெண்ணின் மகள்தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆணுறுப்பை அறுத்த மனைவி... 67 வயது கணவர் கொடூர கொலை - நடந்தது என்ன?

World Bizarre Crime: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கணவனை கொலை செய்த காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

Add Zee News as a Preferred Source

அந்த பெண் தனது கணவனை கொலை செய்வதற்கு முன் அவரது பிறப்புறுப்பை வெட்டியிருப்பதும் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொல்லப்பட்ட நபரின் வயது 67 என்றும் கொலை செய்தவரின் வயது 55 என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர், இது மேலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 

World Bizarre Crime: தகவல் கொடுத்த மகள்

ஸ்பெயின் நாட்டின் வடக்கு பிரதேசத்தில் உள்ள பில்போ என்ற நகரத்தில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இந்த கொடூர கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது. போலீசார் உடனடியாக கொலை செய்த பெண்மணியை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். கொலை செய்த பெண்மணியின் மகள்தான் போலீசாருக்கு கொலை சம்பவம் குறித்த தகவலை அளித்துள்ளார். இந்த கொலைச் சம்பவத்திற்கு முன் இந்த ஜோடி அவர்களது வீட்டில் சத்தம் போட்டு சண்டை போட்டதை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர்.

World Bizarre Crime: நடந்தது என்ன?

பில்போ நகரின் உரிபாரி பகுதியில் இருந்து போலீசாருக்கு கொலை தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, ஒரு ஆண் சடலம் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டிருப்பதை வர்கள் பார்த்துள்ளனர். பலமுறை அந்த நபரை கழுதில் குத்திக் கொலை செய்துள்ளனர், மேலும் அந்த நபரின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டதும் தெளிவாக தெரிந்திருக்கிறது.

World Bizarre Crime: போலீசார் கூறுவது என்ன?

போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில், "பில்போவில் 55 வயது பெண்மணி அவரதை 67 வயது கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். உரிபாரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த கொலை நடந்துள்ளது" என்றார். கொலைசெய்யப்பட்ட நபர் உள்ளூரில் பார் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த ஜோடி கடந்த 5 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். போலீசார் கொலை தொடர்பான தகவலை அறிந்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவரின் மனைவி வீட்டில்தான் இருந்துள்ளார். மேலும் குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். கொலை குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

World Bizarre Crime: கொலைக்கான காரணம் என்ன?

இருப்பினும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தரப்பில் எவ்வித தகவலும் பகிரப்படவில்லை. ஆனால், உள்ளூரில் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், கொலைசெய்யப்பட்ட நபர் பெண்ணை ஏமாற்றியிருக்கலாம் என்றும் அதனால் கூட தாக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஜோடியின் நண்பர் ஒருவர் ஊடகம் ஒன்றில் பேசுகையில், "நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, நிச்சயமாக இது போல் கொடூரமாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை. நான் வேலை முடிந்ததும், அவர்களுடன் மொட்டை மாடியில் மது அருந்துவேன். அவர்கள் பேசுவார்கள், சிரிப்பார்கள். இதற்குப் பின்னால் ஏதோ நிச்சயம் இருக்க வேண்டும்," என்றும் அவர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் படிக்க | பாலியல் தொல்லை... டிரம்பின் அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கிய சிறுமி - பின்னணி என்ன?

மேலும் படிக்க | பல பெண்களுடன் உடலுறவு... பில் கேட்ஸுக்கு பால்வினை நோய்? - பரபரப்பை கிளப்பிய எப்ஸ்டீன் பைல்ஸ்

மேலும் படிக்க | 'ஆட்சியை கவிழ்க்க ஆள் வருது!' - டிரம்ப் பற்ற வைத்த நெருப்பு! பதிலடிக்கு தயாராகும் ஈரான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News