)
Street Dog Became Salesman: பிரேசிலின் எஸ்பிரிடோ சான்டோ மாநிலத்தில் உள்ள Hyundai Prime என்ற கார் ஷோரூமில் ஒரு தெரு நாய் அடிக்கடி உணவும் தங்குமிடமும் தேடி வந்தது.
அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அந்த நாயின் அமைதியான, அன்பான இயல்பால் கவரப்பட்டனர். தினசரி அவர்களுடன் பழகி வந்த அந்த நாயை, இறுதியில் “Tucson Prime” என்ற பெயரில் தத்தெடுத்து, அதிகாரப்பூர்வமாக ஷோரூமின் கார் விற்பனையாளர் ஆக அறிவித்தனர். இந்த சம்பவம் 2020-ஆம் ஆண்டு நடந்தாலும், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், Tucson Prime-க்கு ஒரு ஊழியர் அடையாள அட்டை (ID card) கொடுக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுடன் நேரடியாக பழகும் அனுமதியும் அளிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்க வரும்போது Tucson Prime-இன் வரவேற்பை அனுபவித்து மகிழ்ந்தனர். பலர் குறிப்பாக அந்த நாயை சந்திக்கவே ஷோரூமுக்கு வந்ததாக ஊழியர்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்த கதை சமூக வலைதளங்களில் 2020-ஆம் பகிரப்பட்டதும், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. Tucson Prime-இன் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாக, Hyundai நிறுவனத்துக்கே பெரும் கவனத்தை ஈர்த்தன. அத்துடன், Tucson Prime Hyundai விளம்பர முகவராகவும் தேசிய அளவில் பிரபலமானது.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ