Tonga Earthquake: தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 170க்கும் மேற்பபட்ட தீவுகள் இருக்கின்றன. இவற்றில் பல தீவுகளில் பல மக்கள் வசிக்கவில்லை. அந்த வகையில், இந்த பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளன.
Tonga Earthquake: சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அந்த வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியின் தீவு நாடான டோங்கா அருகே இன்று மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கும் ரிக்டர் அளவுக்கோளில் 7.1 ஆக பதிவாகி உள்லது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tonga Earthquake: சுனாமி எச்சரிக்கை
டோங்கா தீவின் வடகிழக்கு பகுதியில் இருந்து 100 கிலோமிட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பதிவாகி உள்ள பகுதியில் இருந்து 300 கிலோமீட்டருக்குள் அமைந்துள்ள கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
ஆனால், அங்கு பாதிப்புகள் குறித்த எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை. முன்அனப் கூறியபோது 171 தீவுகள் கொண்ட பாலினேஷியாவில் டோங்காவும் ஒரு தீவு நாடாகும். இங்கு ஒரு லட்சத்திற்கும் குறைவானவர்களே வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் முக்கிய தீவான டோங்காடாபுவில் வசிக்கின்றனர். இங்கு கடற்கரை பகுதி 3,500 கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tonga Earthquake: மியான்மர் நிலநடுக்கம் - 1700 பேர் உயிரிழப்பு
மியான்மர் நகரில் நேற்று முன்தினம் (மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.7 ஆக ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மியான்மரின் முக்கிய நகரங்களில் ஒன்றான மண்டலேவில் 6.7 என்ற அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதானல், இந்த இரண்டு நாள்களில் சுமார் 1700 பேர் உயரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.
கடுமையான அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பாலங்கள் இடிந்துள்ளன. பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் 17 லட்சம் மக்கள் வசிக்கும் அந்த நகரின் உள்கட்டமைப்பே மொத்தமாக உருக்குலைந்துவிட்டது எனலாம். அதேபோல், இந்த நிலநடுக்கத்தால் அருகில் இருக்கும் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாங்காங்கில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tonga Earthquake: இன்றும் மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மரின் மண்டலே நகரில் இரவுப் பொழுதில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து வீதிகளை நோக்கி ஓடி வந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பலரும் வசிக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியமும் அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 5.1 ஆக ரிக்டர் அளவு கோளில் பதிவாகி உள்ளது.
மியான்மரில் 1700 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 3,400 பேர் காயமடைந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 66 வயதில் 10வது குழந்தையை பெற்றெடுத்த பெண்! இரும்பு பெண்தான் போல...
மேலும் படிக்க | டர்-புர்னு வாயுவை விட்டாலும் சாக்லேட் வாசம் வரும்! புது கண்டுபிடிப்பு..
மேலும் படிக்க | லீக்கான அமெரிக்காவின் இராணுவ ரகசியம்.. எப்படி சிக்கியிருக்கார்ன்னு பாருங்க ட்ரம்ப்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









