`அனகோண்டா` திரைப்பட பாம்பை விஞ்சிய ரியல் பாம்பு: அமேசான் காட்டின் புதிய ஹீரோ!
உலகிலேயே மிக நீளமான அனகோண்டா பாம்பு அமேசான் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 26 அடி நீளமுள்ள இந்த மிகப்பெரிய பாம்பின் எடை சுமார் 200 கிலோ வரை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அனகோண்டா பாம்புகளை இந்தியாவில் இருக்கும் 90 விழுக்காட்டினர் படத்தில் தான் பார்த்திருப்பார்கள். ராட்ச உருவமும், கற்பனைக்கு எட்டாத உடல் கட்டமைப்புகளையும் கொண்டிருக்கும் அந்த பாம்பை, ஒவ்வொருவரும் அவர்களின் கற்பனைக்கு ஏற்ப தங்கள் மனதில் உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இப்படியொரு பாம்பு உலகின் எங்கோ ஓர் மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் எல்லோரின் எண்ணமாக இருக்கிறது. யூடியூப் கலாச்சாரம் பரவியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அனகோண்டா பாம்புகளின் வீடியோக்கள் ஏராளமாக யூடியூப்பில் இருக்கின்றன. அந்த வீடியோக்களை பார்த்து இத்தனை நாள் நாம் நினைத்துக் கொண்டிருந்த அனகோண்டா பாம்பு இனங்கள் இவை தானா? என மெயர்சிலிர்க்கின்றனர்.
இத்தகைய சூழலில், இயற்கையின் அரிய பொக்கிஷங்களையெல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் அமேசான் காட்டில் இன்னொரு அதியசமாக உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான் ஆற்றங்கரையில் தனியார் தொலைக்காட்சியின் ஆவண படப்பிடிப்பின் போது வனவிலங்கு தொகுப்பாளரான பேராசிரியர் ஃபிரீக் வோங்க் (freek vonk) உலகின் நீளமான இந்த அனகோண்டாவை கண்டுப்பிடித்தார். இதுவரை சவுத் கிரீன் அனகோண்டா பாம்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதன்முறையாக நார்த் கிரீன் அனகோண்டா பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாம்பின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த அனகோண்டா பாம்பின் தலை மனித தலையின் அளவிற்கு உள்ளது. பாம்பின் வால் முதல் தலை வரை அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. 26 அடி நீளமுள்ள இந்த மிகப்பெரிய பாம்பின் எடை சுமார் 200 கிலோ வரை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 1997 தொடங்கி 2015 வரை ஹாலிவுட்டில் அனகோண்டா தொடர்பான 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் காட்டப்பட்ட அனகோண்டா பாம்புகளை விட நீளமான அனகோண்டா பாம்பு தான் தற்போது அமேசான் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் வியப்பின் உச்சம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ