)
US Favors China, Targets India? சீனாவுக்கு தளர்வும், இந்தியாவுக்கு கடுமையான தடை நடவடிக்கையும், உலக எண்ணெய் சந்தையில் புதிய அரசியல் பிளவை காட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் கூட்டணி நிலைப்பாட்டில் கேள்விகள் எழுந்துள்ளன.
சீனா - சவுதி எண்ணெய் வாங்குதல் குறைவு:
செப்டம்பரில், சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வாங்குதலைக் குறைத்தன. அதற்கு பதிலாக, மலிவான விலையில் கிடைக்கும் ரஷ்யா “உரால்ஸ்” கச்சா எண்ணெய் வாங்குவதில் ஆர்வம் காட்டின.
இந்தியாவுக்கு அமெரிக்கா அதிக வரி:
அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா ரஷ்யா எரிசக்தி வாங்குவதை காரணம் காட்டி, இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் 25% இறக்குமதி வரி விதித்தார். இந்த வரி ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வர உள்ளது.
ரஷ்ய எண்ணெய் - சீனாவின் விருப்பம்:
லண்டனில் உள்ள எனர்ஜி அஸ்பெக்ட்ஸ் என்ற நிறுவனம் சொன்னது – “ரஷ்யாவின் ‘உரால்ஸ்’ கச்சா எண்ணெய், central east(சவுதி, ஈராக் போன்ற நாடுகள்) எண்ணெய்களை விட மலிவாக கிடைக்கிறது. அதனால் சீனா அதை வாங்க ஆர்வமாக இருக்கிறது.” ஆனால் அவர்கள் எச்சரித்தது –
“இப்போவே ரஷ்யா, சீனாவுக்கு வரும் மொத்த வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியில் 17% பங்கைக் கொண்டுள்ளது. ஒரே நாட்டிலிருந்து 20%க்கும் மேல் வாங்குவது பாதுகாப்பாக இல்லை.” என்கிறது.
சவுதி எண்ணெய் அனுப்புதல் குறைவு:
புளூம்பெர்க் (Bloomberg) கூறியபடி – செப்டம்பர் மாதத்தில், சவுதி அராம்கோ சீனாவுக்கு (Saudi Aramco) 4.3 கோடி பீப்பாய் (சுமார் 683.7 கோடி லிட்டர்) எண்ணெய் மட்டுமே அனுப்பியது. இது, ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பிய 5.1 கோடி பீப்பாய்க்கும் (சுமார் 810.9 கோடி லிட்டர்) , இந்த ஆண்டு சராசரியாக அனுப்பும் 4.5 கோடி பீப்பாய் (சுமார் 715.5 கோடி லிட்டர்) விடக் குறைவு.
இந்தியாவின் எதிர்ப்பு:
அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், அதே விஷயத்தைச் செய்த இந்தியாவுக்கு மட்டும் தடை மற்றும் கூடுதல் வரி விதித்தது. இதைக் கண்டித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் சொன்னது – “இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வணிகம் செய்து கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க, இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமில்லை.”
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் சார்பு:
2020–21 நிதியாண்டில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் சார்பு 1.7% தான் இருந்தது. 2024–25ல் அது 35.1% ஆக உயர்ந்தது. இதனால் ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வழங்குநராக மாறியது.
ரகுராம் ராஜன் கருத்து:
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சொன்னது - “இந்தியா ரஷ்யா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினாலும், பொருளாதாரத்திற்கு பெரிய பிரச்சனை வராது. ஆனால் அரசியல் ரீதியில் அது கடினம். ஏனெனில், அமெரிக்கா அழுத்தம் கொடுத்து, மேலுமாக வரி மிரட்டலும் விடுத்தால், அதை ஏற்று பின்வாங்கினால், இந்தியாவில் மக்கள் அதை நல்லதாக பார்க்கமாட்டார்கள்.”
சீனாவுக்கு தளர்வு – கூட்டணியில் மாற்றம்:
அமெரிக்க வெள்ளை மாளிகை, சீனாவுடன் 90 நாள் வரி ஒப்பந்தத்தை நீட்டித்தது. இதனால், சீனப் பொருட்களுக்கு 145% ஆக இருந்த வரி உயர்வு தவிர்க்கப்பட்டது; தற்போதைய 30% மட்டுமே தொடரப்பட்டது. இந்த தளர்வு சீனாவுக்கு கிடைத்தாலும், இந்தியாவுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்தது, அமெரிக்காவின் கூட்டணி நிலைமையில் மாற்றம் எனக் கருதப்பட்டது.
அதே சமயம், டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை அலாஸ்காவில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ