சிதறிய ஈரான் போர் கப்பல்... இந்திய பெருங்கடலில் 87 பேர் பலி - 2ம் உலகக் போருக்கு பின் முதல்முறை

Iran Warship Sank By US Submarine: இந்தியாவில் போர் பயிற்சியை முடித்து, தாயகம் திரும்பிய ஈரான் போர் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் 87 பேர் உயிரிழந்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 5, 2026, 09:34 AM IST
  • சர்வதேச கடல் பகுதியில் இருந்தபோது தாக்குதல்
  • தாக்குதல் நடத்திய வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
  • 2ஆம் உலகப் போருக்கு பின் முதல்முறையாக அமெரிக்கா இந்த வகையில் தாக்கி உள்ளது.
சிதறிய ஈரான் போர் கப்பல்... இந்திய பெருங்கடலில் 87 பேர் பலி - 2ம் உலகக் போருக்கு பின் முதல்முறை

IRIS Dena, Iran Warship Sank By US Submarine: இந்திய பெருங்கடலில், இந்தியாவில் இருந்து பயிற்சி முடித்து திரும்பிய ஈரானின் போர் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியது. இதனால், ஈரான் போர் கப்பல் கடலில் மூழ்கியதில் சுமார் 87 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

தாயகம் திரும்பும் வழியில் தாக்குதல்...

ஈரானின் போர் கப்பலான IRIS Dena, கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தது. MILAN  என்றழைக்கப்படும் பல தரப்பு கடற்படை பயிற்சிக்கு அப்போர் கப்பல் இந்தியா வந்துள்ளது. அந்த வகையில், இன்று (மார்ச் 5)  தாயகத்தை அடைய இருந்த IRIS Dena போர் கப்பலை அமெரிக்கா நேற்று (மார்ச் 4) தனது நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்கி வீழ்த்தியது.

87 பேர் உயிரிழந்ததாக AFP ஊடகம் செய்தி வெளியிட்ட நிலையில், அமெரிக்கா இன்னும் உயிரிழப்பு எண்ணிக்கை அறிவிக்கவோ அல்லது உறுதிசெய்யவோ இல்லை. ஆனால், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல், ஈரான் போர் கப்பலை வீழ்த்தியதை அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

இதுவே முதல்முறை...

பீட் ஹெக்செத் இதுகுறித்து கூறுகையில், "சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக கருதிய ஈரானிய கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை தாக்கி வீழ்த்தியது. நீர்மூழ்கி கப்பலின் குண்டு தாக்கி, அந்த கப்பல் வீழ்த்தப்பட்டது" என்றார். இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல்முறையாக எதிரி கப்பலை டார்பிடோ (நீர்மூழ்கி கப்பலின் குண்டு) மூலம் வீழ்த்துவது இதுவே முதல்முறை என்றும் ஹெக்செத் தெரிவித்தார்.

கடற்படையை அழிப்பதே நோக்கம்

அந்த போரை போலவே நாங்கள் (அமெரிக்கா) வெற்றி பெற போராடும் என தெரிவித்தார். குறிப்பாக, கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கிய அமெரிக்கா - ஈரான் போரில், இஸ்ரேல் உடன் சேர்ந்த நடத்தும் இந்த தாக்குதலில் ஈரானின் கடற்படையை அழிப்பதும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்திருந்தது.

வெடித்துச் சிதறிய ஈரான் போர் கப்பல்

அமெரிக்காவின் போர் துறை, ஈரானிய கப்பல் தாக்கப்பட்டதன் வீடியோவை வெளியிட்டுள்ளது. தூரத்தில் இருந்து பெரிஸ்கோப் பார்வையில் ஈரானிய போர் கப்பல் தாக்குதலில் வெடித்துச் சிதறுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி, மற்றொரு கப்பலை வீழ்த்தும் நேரடி காட்சிகளை இதுவரை எந்த ராணுவமும் வெளியிட்டது இல்லை.

ஆனால் தற்போது அமெரிக்கா இதை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் போரின் முகங்கள் மாறுவதையும் பார்க்க முடிகிறது. ஈரானிய போர் கப்பலால் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை கண்டறிய இயலாததும், அமெரிக்காவின் பலமான போர் வியூகங்களை காட்டுகிறது. 

தொடரும் மீட்புப் பணிகள்

இலங்கை கடற்படை அதிகாரிகள், ஈரான் போர் கப்பலில் இருந்து கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 87 உடல்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர், இன்னும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர், 61 வீரர்களை இலங்கை கடற்படை தேடி வருகிறது.

மேலும் படிக்க | ஈரானின் உச்ச தலைவர்... கமேனியின் மகன் தேர்வு செய்யப்பட்டது ஏன்? அதிகாரங்கள் என்னென்ன?

மேலும் படிக்க | காமேனியை அவர் இடத்திலேயே போட்டுத்தள்ளியது எப்படி? இஸ்ரேல் - அமெரிக்காவின் ராஜதந்திரம் என்ன?

மேலும் படிக்க | Strait of Hormuz | ஹார்முஸ் நீரிணை ஏன் இவ்வளவு முக்கியம்? உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் எரிசக்திப் போர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News