World Bizarre News: அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் மாணவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக பெண் ஆசிரியருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
30 வயதான கிரிஸ்டல் சிம்ஸ் என்பவர் பள்ளியில் மாற்று ஆசிரியராக இருந்துள்ளார். இவர் தனது மாணவன் ஒருவரிடம் வீடியோ காலில் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார். வீட்டில் குளியறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது, அந்த பெண் ஆசிரியர் வீடியோ காலில் அழைத்து தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து, அந்த மாணவனிடம் அத்துமீறியிருக்கிறார். மேலும், அந்த மாணவனுடன் உடலுறவு கொள்வதற்காக இந்த செயலை அவர் செய்திருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண் ஆசிரியரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த மாணவன், பேரன் கவுண்டியின் தலைமை காவலரிடம் கடந்த செவ்வாய்கிழமை அன்று புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறைக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதில், 30 வயதான கிரிஸ்டல் சிம்ஸ் என்ற பெண் ஆசிரியர், சிறுவனிடம் உடலுறவு கொள்வதற்கு அழைப்புவிடுக்கும் வகையில் பேசியிருக்கிறார் என கூறப்படுகிறது.
சிம்ஸ், பேரன் கவுண்டியில் அந்த மாணவனுக்கு மாற்று ஆசிரியராக சில காலம் பணியாற்றி வந்துள்ளார். அதன்பின்னரும் சிம்ஸ், அந்த மாணவருடன் ஸ்நாப்சேட் உடன் தொடர்பில் இருந்தார். அந்த மாணவன் தான், பெண் ஆசிரியருக்கு ஸ்நாப்சேட்டில் Request அனுப்பி உள்ளார்.
அதன்பின், இருவரும் ஸ்நாப்சேட்டில் தொடர்ந்து சேட்டிங் செய்துவந்துள்ளனர். டென்னசி மாகாணத்தில் நாஷ்வில் நகரின் வடக்கே உள்ள கேவ் சிட்டியில் இருவரும் தனியே சந்தித்து உடலுறவு மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதிதான் அந்த வீடியோ கால் சம்பவம்நடந்துள்ளது. பெண் ஆசிரியர் சிம்ஸ், அந்த சிறுவனக்கு மொபைலில் முதலில் கால் செய்துள்ளார். அந்த ஆடியோ கால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதன்பிறகே, வீடியோ கால் செய்துள்ளார், சிம்ஸ். அந்த வீடியோ கால் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அந்த வீடியோ காலில்தான், மாணவனுக்கு தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து மாணவனிடம் அத்துமீறியிருக்கிறார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பெண் ஆசிரியை முற்றிலும் மறுத்துள்ளார். அந்த பதிவு செய்யப்பட்ட போன் காலில் பேசியது நான் தான் என்றும் ஆனால் உடலுறவுகொள்ளும் நோக்கில் அந்த சிறுவனை சந்திக்க அழைக்கவில்லை, வகுப்பறையில் அவன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வைக்கவே அவனை அழைத்ததாகவும் அந்த பெண் ஆசிரியர் விசாரணையில் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இருவரும் உடல் ரீதியாக நெருக்கம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. பெண் ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் பெண் ஆசிரியர்கள் மாணவர்களிடம் அத்துமீறும் சம்பவங்களும் அவ்வப்போது பதிவாகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









