)
World Bizarre News: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவர் 11 வயது மாணவனை அவரது வீட்டிற்கே அழைத்து, பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் நடந்திருக்கிறது.
தற்போது அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திலும் அந்த பெண் ஆசிரியர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இன்னும் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படாத நிலையில் இச்சம்பவம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
34 வயதான ஆலி பார்ட்ஃபீல்ட் என்ற பெண்மணி டெக்காட்டூர் பொதுப் பள்ளிகள் அமைப்பில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். குழந்தைகளுடன் விளையாடுவதற்கு அந்த 11 வயது மாணவனை வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர். தற்போது நீதிமன்றத்தில் நடந்துவந்த விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 11 வயது மாணவன் அடிக்கடி அந்த பெண் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். அதிலும் 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் அந்த ஆசிரியரின் வீட்டிற்கு இரண்டு தடவைக்கு மேல் சென்றிருக்கிறார். ஆசிரியரின் வீட்டிலேயே அந்த சிறுவன் ஓரிரு இரவு தங்கியிருக்கிறான்.
போலீசாரிடம் மாணவனின் தாயார் கூறுகையில், கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 2வது முறையாக சென்று வந்தபோது மாணவன் ஏதோ வித்தியாசமாக நடப்பதாக அவனின் தாயார் உணர்ந்துள்ளார். இதையடுத்து, 11 வயது மாணவனின் மொபைலை ரகசியமாக பார்த்ததில் அவனுக்கும், பெண் ஆசிரியருக்கும் இடையே பாலியல் ரீதியான மெசேஜ்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், அந்த பெண் ஆசிரியரிடம் இருந்து சிறுவனுக்கு 700 அமெரிக்க டாலர் அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, போலீசார் விசாரணையில் அந்த மாணவன் தான் தன்னை நோக்கி ஈர்க்கப்பட்டதாக கூறியிருந்தார். ஆலி பார்ட்ஃபீல்ட் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மாணவன் படிக்கும் 6ஆம் வகுப்புக்கு கடந்தாண்டு தற்காலிக ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ