Shubhanshu Shukhla: இந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு இன்று பயணப்பட இருக்கும் நிலையில், அவர் SpaceX டிராகன் விண்கலத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

Shubhanshu Shukhla: இந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு இன்று பயணப்பட இருக்கும் நிலையில், அவர் SpaceX டிராகன் விண்கலத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு, அமெரிக்காவின் காமாண்டர் பெக்கி விட்சன் ஆகியோருடன் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.01 மணிக்கு SpaceX Crew டிராகன் விண்கலத்தில் விண்ணில் பாய உள்ளனர்.
Falcon-9 ராக்கெட்டில் பறக்கும் SpaceX Crew டிராகன் விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள 39A ஏவுதள வளாகத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டு பூமியில் இருந்து முதல்முறையாக நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் சென்ற அப்பல்லோ 11 விண்கலமும் இங்கிருந்துதான் புறப்பட்டது.
1984ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சார்பில் விண்வெளிக்கு பயணித்த குழுவில் இந்தியாவின் விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவும் ஒருவர். சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா சார்பில் இரண்டாவதாக விண்வெளிக்கு செல்லும் வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். விண்வெளி பயணத்திற்கு தயாராவதன் பொருட்டு சுமார் ஒரு மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டார்.
Axiom-4 மிஷனின் நான்கு பேர் கொண்ட குழு, 15 நாட்கள் வரை இந்த பயணத்தை மேற்கொள்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் இவர்கள் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். அவற்றில் ஏழு இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் Axiom-4 விண்வெளி பயணம் ஆறு முறை தள்ளிவைக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி என்பது நாசாவால் அறிவிக்கப்பட்ட ஆறாவது தேதியாகும்.
வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்களை மட்டுமல்ல, கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் என்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறேன் என சுபான்ஷு சுக்லா பேசியிருந்தார். சுபான்ஷு சுக்லா உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் 1985ஆம் ஆண்டில் பிறந்தவர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து, சுபான்ஷு, கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி அன்று இந்திய விமானப்படையின் போர் பிரிவில் இணைந்துள்ளார். அதன்பின்னர் விண்வெளிக்கு செல்ல பல்வேறு கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு, நாசாவால் இந்த விண்வெளி மிஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ