Israel Iran Attack Latest News In Tamil: ஜூன் 13 முதல் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் இன்னும் தொடர்கிறது. ஆனால் அதனுடன், மற்றொரு போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். அது சமூக ஊடகங்களின் போர். இந்தப் போர் பொதுவான இணைய பயனர்களுக்கு இடையேயானதல்ல. இது உலகின் முக்கிய மற்றும் சக்திவாய்ந்த தலைவர்களுக்கும் இடையிலானது. இதுவரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். ஆனால் இப்போது ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி அவரது பதிவுகளுக்கு பதிலளித்து வருகிறார்.
களம் இறங்கிய விளாடிமிர் புதின்
இப்படி இருக்கும் நிலையில், இந்த விஷயம் இன்னும் கொஞ்சம் மேலே சென்றுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இதில் இணைந்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் மத்தியஸ்தம் செய்ய விளாடிமிர் புதின் முன்வந்துள்ளார்.
விளாடிமிர் புதினுக்கு பதிலடி டிரம்ப்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து விளாடிமிர் புதினின் அறிக்கை வெளிவந்தது, இதனையடுத்து டிரம்ப் விளாடிமிர் புதினைச் சுற்றி வளைத்து, முதலில் நீங்கள் உங்கள் சொந்த நாட்டை பார்க்க வேண்டும் என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இதனுடன், மற்றொரு செய்தியும் வெளியாகி வருகிறது. ஈரான் மீதான தாக்குதல் திட்டத்திற்கு டிரம்ப் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தி தான் அது. ஆனால் சில காரணங்களால், இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க ஊடகமான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டத் தகவல்.
அமெரிக்க ஊடக அமைப்பான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது கட்டுரையை வெளியிட்டது. அதில், "ஈரானுக்கான தாக்குதல் திட்டங்களை டிரம்ப் தனிப்பட்ட முறையில் அங்கீகரித்தார். ஆனால் இறுதி உத்தரவை இன்னும் வைத்திருக்கிறார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, ஈரானை தாக்கும் திட்டத்தை டிரம்ப் தனிப்பட்ட முறையில் அங்கீகரித்துள்ளார். ஆனால் தாக்குதல் நடந்த இறுதி உத்தரவு இன்னும் அவர் வழங்கவில்லை என்பதே ஆகும்.
ஏன் இன்னும் உத்தரவு வழங்கப்படவில்லை? தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அமெரிக்க ஊடகம் செய்தியில், "ஈரானுக்கான தாக்குதல் திட்டத்தை ஜனாதிபதி டிரம்ப் அங்கீகரித்ததாக மூத்த உதவியாளர்களிடம் கூறியதாகவும், ஆனால் தெஹ்ரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க இந்த தாக்குதல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஃபோர்டோ அமெரிக்காவின் இலக்கில் உள்ளது. இது ஒரு மலையின் கீழ் புதைந்தது இருக்கிறது. பொதுவாக அங்கே தாக்குதல் நடந்த அனைவராலும் முடியாது எனவும், ஆனால் அமெரிக்கா செய்ய முடியும் எனவும் கருதப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க முடிவு செய்துள்ளீர்களா என்று டிரம்பிடம் கேட்டபோது? இதற்கு பதிலளித்த டிரம்ப், "நான் இதைச் செய்ய முடியும். அதேநேரம் இதைச் செய்யாமலும் இருக்கலாம்" என்றார். அதாவது ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதல் குறித்து டிரம்ப் தனது முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதாகவும், அடுத்த வாரம் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அலி கமெனி எச்சரிக்கும் அதிபர் டிரம்ப்
டிரம்பிற்கும் அலி காமெனிக்கும் இடையிலான சமூக ஊடகப் போர் உச்சைத்தை அடைந்துள்ளது. இந்திய நேரப்படி, ஜூன் 17 இரவு, "உச்சத் தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவரை எளிதில் குறிவைத்து தாக்க முடியும். இப்போதைக்கு, அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் இப்போது அவரைத் தாக்க மாட்டோம். ஆனால் சாதாரண குடிமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை இப்போது தீர்ந்து விட்டது என்று டிரம்ப் எக்ஸ் (X) தளத்தில் கூறியிருந்தார்.
அடுத்ததாக மற்றொரு பதிவில் டிரம்ப், "நிபந்தனையின்றி சரணடைதல்" எனப் பதிவு போட்டார். சரணடைதல் பதிவிற்குப் பிறகு, கமேனி தரப்பில் டிரம்ப் பற்றி பல தொடர்ச்சியான பதிவுகள் வெளியானது.
அதிபர் டிரம்ப்புக்கு பதிலடி கொடுத்த அலி கமெனி
ஜூன் 18 ஆம் தேதி இரவு, அவர் X இல் ஈரானிய மக்களை சரணடையச் சொல்வது புத்திசாலித்தனமான செயல் அல்ல என்று, ஏன் சரணடைய வேண்டும்? ஈரான் சரணடையப் போவதில்லை. நாங்கள் யாரையும் தாக்கவில்லை. யாருடைய ஆக்கிரமிப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனப் பதிலடி தந்து பதிவிட்டுள்ளார்.
ஒரு மணி நேரம் கழித்து, அலி கமேனி மற்றொரு பதிவை போட்டார். அதில், "இந்தப் பிராந்திய அரசியலை நன்கு அறிந்த அமெரிக்கர்கள், இந்த விஷயத்தில் தங்கள் ஈடுபாடு தங்களுக்கு 100% தீங்கு விளைவிக்கும் என்பதை அறிவார்கள். மேலும் அவர்கள் பெறும் அடி ஈரானுக்கு ஏற்படும் சேதத்தை விட அதிகமாக இருக்கும். அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் இராணுவ ரீதியாகத் தலையிட்டால், அது சந்தேகத்திற்கு இடமின்றி பெரும் இழப்புகளைச் சந்திக்கும் என்றும் எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மாறி மாறி தாக்குதல்
ஜூன் 19 ஆம் தேதி காலை வரை ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த மோதல் ஜூன் 13 முதல் நடந்து வருகிறது. சமீபத்திய தாக்குதல்களைப் பற்றிப் பார்க்கையில், இஸ்ரேலிய விமானப்படை ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் தாக்குதல்களின் அலையைத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது. அதநேரம் ஈரான் தரப்பும் இஸ்ரேலையும் குறிவைத்து தாக்கி வருகிறது. ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அது ஈரானிய தாக்குதலில் அழிக்கப்பட்ட இஸ்ரேலிய மருத்துவமனையின் வீடியோ என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை குறித்து, ஈரானின் பயங்கரவாத சர்வாதிகாரிகள் மருத்துவமனை மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். மேலும் தெஹ்ரானில் அமர்ந்திருக்கும் சர்வாதிகாரிகளிடமிருந்து, இதற்கான முழு விலையையும் நாங்கள் பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ