World Bizarre News: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த மோனிக் ஜெரேமியா என்ற பெண் தற்போது வழக்கத்திற்கு மாறான வகையில் பணம் சம்பாதித்து வருகிறார். அதாவது, கரோனா பெருந்தோற்று காலகட்டத்தில் இருந்தே வழக்கதற்கிற்கு புதிய தொழிலை தொடங்கி அதில் பெரிய வருவாயை ஈட்டி உள்ளார்.
World Bizarre News: படுக்கை பகிர்வது என்றால் என்ன?
ஒரு கட்டத்தில் டிரெண்டிங்கில் இருந்த Hot Bedding என்ற வினோதமான தொழிலைதான் ஜெரேமியா கையில் எடுத்துள்ளார். அதாவது, இவர் தனது படுக்கையின் பாதி பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டு இந்திய ரூபாய் மதிப்பில் 54 ஆயிரத்தை ஒரு மாதத்திற்கு சம்பாதிக்கிறாராம்.
இது கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், இதன் விதிகள் ஓரளவு எளிமையானதுதான். இரண்டு பேர் ஒரு படுக்கையில்தான் தூங்குவார்கள். ஆனால், உணர்வு ரீதியான பந்தமோ, காதல் உறவோ எதுவும் இருக்காது. ஒரு பக்கத்தில் மோனிக் படுத்திருப்பார், மற்றொரு பக்கத்தில் யார் என்ற தெரியாத நபர் படுத்திருப்பார். இருவரும் தாங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். இது விதியை வரும் நபர்கள் பின்பற்றி, எதிர்பார்ப்புகள் இன்றி இருந்தால் எந்த பிரச்னையும் வராது என்கிறார் மோனிக்.
World Bizarre News: கரோனா காலத்தில் கைக்கொடுத்த யோசனை
2020ஆம் ஆண்டில் பெருந்தோற்று காலகட்டத்தில், மோனிக் அவரது வேலையை இழந்துள்ளார், மேலும் தனிமையில் வாடி உள்ளார். இதனால், அவர் தனது தனிமையை போக்குவதற்கு மட்டுமின்றி தனித்துவமான முறையில் பணம் சம்பாதிக்கும் வழியையும் அவர் கண்டடைந்துள்ளார். "எனது வாழ்க்கையே தலைகீழாக மாறியது, எனவே வித்தியாசமாக யோசித்தாக வேண்டும் என்பது எனக்கு புரிந்தது" என்றார்.
அவர் முதன்முதலில் இந்த தொழிலை அவரது முன்னாள் காதலனை வைத்தே தொடங்கி உள்ளார். நீண்ட நாள்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை கூட இருந்ததில்லையாம். ஒருநாள் மோனிக் போன் செய்து,"கரோனாவிடம் இருந்து ஒன்றாக இணைந்து உயிர் தப்பிக்க உனக்கு விருப்பமா?" என கேட்டுள்ளார்... அதற்கு அவருடன் உடன்படவே... அப்படியே இந்த வழியில் பணம் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்.
World Bizarre News: வாடகையை உயர்த்த திட்டம்
அவரது முன்னாள் காதலனுக்கு இரண்டு முறை படுக்கையை வாடகைக்கு கொடுத்தாராம். மோனிக் தற்போது தனது படுக்கையின் வார வாடகை தொகையை 127 யூரோவாக, அதாவது 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்த இருக்கிறாராம். தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தனது அறை நன்றாக விசாலமாக இருக்கும் என்றும் ஆடம்பரமானதாக இருக்கும் என்றும் மோனிக் தெரிவித்தார். ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையைப் போன்று இருக்கும் என்றார். கடினமான நேரத்தில் Hot Bedding அவருக்கு உதவியிருந்தாலும், கரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் இந்த டிரெண்டிங் ஈர்ப்பை இழந்தது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் இப்போது அந்நியர்களுடன் இதுபோன்ற நெருக்கமான ஏற்பாடுகளை தவிர்க்கிறார்கள் எனலாம்.
மேலும் படிக்க | பூமியில் விழும் 500 டன் ஆபத்து! நினைத்துப் பார்க்க முடியாத வேகம்
மேலும் படிக்க | சிந்து நதி நீர் விவகாரம்.... பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்
மேலும் படிக்க | தளவாட இருப்புகள் காலி... திண்டாடும் பாகிஸ்தான்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









