)
World Bizarre News: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் கிரான்போர்ன் வடக்கு பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கிரான்போர்ன் வடக்கு பகுதியில் உள்ள அல்கிரா மேல்நிலைப்பள்ளியில் 15 வயது மாணவியிடம், பெண் ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியான அத்துமீறிலில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது, 15 வயது மாணவியுடன் ரகசியமாக பாலியல் உறவில் இருந்ததை பெண் ஆசிரியர் ஒப்புக்கொண்டுள்ளார். லாரா ஆன் ஹில் என்ற அந்த பெண் ஆசிரியருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. 38 வயதான அந்த பெண் தற்போது கடும் சிறை தண்டனைக்கு ஆளாகி உள்ளார். மாணவிக்கும் ஆசிரியருக்கும் வயது வித்தியாசம் 23 ஆண்டுகள் என்பது கவனிக்கத்தக்கது.
போலீசாரின் கூற்றுப்படி, லாரா அந்த மாணவியையும் காதலித்ததாகவும், அந்த மாணவிக்கும் லாராவின் மீது ஈர்ப்பு இருந்திருப்பதாகவும் தெரிகிறது. கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது இவர்களின் உறவு குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, லாராவும், மாணவியும் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். பார்க்கில் நள்ளிரவுகளில் பலமுறை தனியே சந்தித்துக் கொண்டுள்ளனர். லாாராவின் வீட்டிலும் பல இரவுகளை அந்த மாணவி கழித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை அந்த மாணவியின் பூர்வீக வீட்டுக்கு சென்று, லாராவும் மாணவியும் கஞ்சாவை புகைத்துள்ளனர். அப்போது திடீரென மாணவியின் பாட்டி வீட்டிற்கு வந்துவிட லாரா அலமாரியில் மறைந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். 16 வயதுக்கு குறைவான சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக லாரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. இருப்பினும் தான் செய்தது மிகப்பெரிய தவறு என உணர்ந்துகொண்ட லாரா, அந்த மாணவியின் தாயாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாக லாராவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
லாராவின் கணவர் இவரை விட்டுச்சென்ற நிலையில் தற்போது 8 வயது மற்றும் 4 வயது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது இந்த குற்றத்தினால் அவரது வாழ்க்கையே பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மேலும் Interpersonal Personality Disorder என்ற மனநல பிரச்னையால் லாரா பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவரின் வழக்கறிஞர் டிக்சன் வாதிடுகிறார். இந்த மனநல பிரச்னை என்பது சிந்தனை, உணர்ச்சி மற்றும் நடத்தை ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது மற்றவர்களுடனான உறவுகளில் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் அவரது கணவர் உடனான உறவில் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், இவர் கண்டுக்கொள்ளப்படாமல், காதலிக்கப்படாமல் மிகவும் விரக்தி மனநிலையில் இருந்துள்ளார் என்று கூறிய வழக்கறிஞர் அவருக்கு தேவையான பாலியல் ரீதியான நெருக்கமும் கிடைக்கவில்லை என்றார். லாராவுக்கு இதற்கு முன் குழந்தைகள் மட்டுமல்ல, பெண்களிடத்தில் ஈர்ப்பு இருந்ததாக வரலாறு ஏதுமில்லை என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
லாராவின் கணவருக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. நீ போலீசாரிடம் சென்று ஒப்புக்கொள்ளாவிட்டால் நானே சென்று இதுகுறித்து புகார் அளித்துவிடுவேன் என எச்சரித்துள்ளார். அதன் பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் கூட அந்த மாணவிக்கு லாரா கால் மற்றும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். மேலும் தொடர்ந்து மாணவியுடன் விளையாடுத் திடலில் சந்தித்துக்கொண்டு அங்கு ரகசியமாக பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து லாராவை மீண்டும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி லாராவுக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. அவருக்கு பெரும்பாலும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ