Baba Vanga Prediction: கொரோனா நோய் தொற்று மீண்டும் உருவெடுத்து இந்திய உட்பட உலக நாடுகளில் பரவி வருகிறது என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே வெளியாகி வருகிறது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கொரோனா என்ற நோய் தொற்று பரவி படுத்தியபாடு என்னவென்று அனைவரும் அறிவோம். கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளை இன்னும் சரிகட்ட முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருவதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கையில், மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மருத்துவ துறையை கவலை அடைய செய்திருக்கிறது. இது குறித்து பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ராஜீவ் பெல், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மாறுபாடுகள் வீரியமற்றவை. இதன் காரணமாக வைரஸ் பாதித்த பெரும்பாலான நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்கதரிசனம் ஒன்று தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு "The Future As I See It" எனும் புத்தகத்தை எழுதிய ஜப்பானிய மாங்கா கலைஞரான ரியோ டட்சுகி, 2020ஆம் ஆண்டு ஒரு வைரஸ் உருவாகி, மறையும் என்றும், மீண்டும் 2030ஆம் ஆண்டு அதே வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எழுதி இருந்தார். இதனை தற்போது பாபா வாங்காவின் எதிர்கால கணிப்புகளுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதன்படி வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல வீரியமடைந்து 2030ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டி காட்டுகின்றனர்.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ்
மறுபுறம் வரும் ஜூலை மாதத்தில், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்படும் என பாபா வங்கா முன்னதாகவே கணித்துள்ளார். இதுவும் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. இந்த சுனாமி கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்றும் அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பலித்தவை
ஏற்கனேவே பாபா வங்காவின் கணிப்புகள் பல பலித்திருக்கிறது. இரட்டை கோபுர தாக்குதல், கொரோனா தொற்று, இளவரசி டயானா மரணம் உள்ளிட்ட பல விஷயங்கள் பாபா வாங்கா ஏற்கனவே கணித்தது என கூறப்படுகிறது.
யார் இந்த பாபா வங்கா?
பல்கோரியாவை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டில் பிறந்துள்ள இவர் புயலில் சிக்கியதால், 12 வயதில் தனது கண் பார்வையை இழந்துள்ளார். இந்த சோகமான சம்பவத்திற்கு பிறகு அவர் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், இவர் 1996ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால் இவரது எதிர்கால கணிப்புகள் கேட்பவரை உறைய வைத்துள்ளது.
மேலும் படிங்க: காணாமல் போன அணு குண்டுகள்... இன்று வரை கண்டுபிடிக்கல - எப்போது வேணா வெடிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









