2026ல் காத்திருக்கும் பேரழிவுகள்.. பயமுறுத்தும் பாபா வங்கா கணிப்புகள்! முழு விவரம்

2026 Baba Vanga Prediction: 2026ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் நடக்கப்போகும் பேரழிவுகள் என பாபா வங்காவின் கணிப்புகளை பலரும் வைரலாக்கி வருகின்றனர்.    

Written by - R Balaji | Last Updated : Jan 8, 2026, 11:37 AM IST
  • 2026 எப்படி இருக்கும்
  • பாபா வங்காவின் கணிப்பு
  • முழு விவரம்
2026ல் காத்திருக்கும் பேரளிவுகள்.. பயமுறுத்தும் பாபா வங்கா கணிப்புகள்! முழு விவரம்

Baba Vanga Predictions: பாபா வங்கா என்பவர் பல்கேரியாவை சேர்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசி ஆவார். இவர் உலகில் நடக்கக்கூடியதை முன்கூடியே கணித்திருக்கிறார். ஆனால் இவர் 1966ஆம் ஆண்டே காலமாகிவிட்டார். இருந்தபோதிலும், பாபா வங்காவின் கணிப்புகள் இன்றளவும் பேசப்படுவதாக இருக்கிறது. இதுவரை நடந்திக்கும் இரட்டை கோபுர தாக்குதல் முதல் கரோனா வரை என அனைத்துமே அவரது கணிப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டில் நடக்கப்போகும் நிகழ்வுகள் என பாபா வங்காவின் கணிப்புகளை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

பாபா வங்காவின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு மிகவும் ஆபத்தானதாக கணிக்கப்பட்டுள்ளது. உலக போர் முதல் செயற்கை நுண்ணற்வின் ஆதிக்கம் என கடுமையான பிரச்சனைகள் உலகை அச்சுறுத்த வாய்ப்பிருக்கிறதாம். 

வெனிசுலா மீது அமெரிக்க தாக்குதல் 

பாபா வங்காவின் கணிப்பில் இந்த ஆண்டில் உலக அளவில் பதற்றம் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒரு மிகப்பெரிய மோதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகின் முக்கியமான நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்கள் உலகின் அமைதியை சீர்குலைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்கா வெனிசுலா பிரச்சனை தலைதூக்கி உள்ளது. 

இயற்கை பேரவுகள் 

2026ஆம் ஆண்டில் இயற்கை பேரழிகள் அதிகம் இருக்கும் என பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது, நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகள் மக்களை கொன்று குவிக்கும் என கூறப்பட்டுள்ளது. காலநிலை சமநிலையின்மை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். வானிலை மாற்றங்களாலும் அழிவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. 

AI-யால் வரும் பிரச்சனை 

செயற்கை நுண்ணரிவின் (AI) ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் மனிதர்களிள் வேலை வாய்ப்புகள் பறிபோகும். மனிதர்களுக்கு பதிலாக அதுவே அனைத்து வேலைகளையும் செய்யும். இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், நமது அன்றாட வாழ்க்கையை கூட தொழில்நுட்பம் கட்டுப்படுத்தும் சூழல் ஏற்படும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

நிதி நெருக்கடி ஏற்படக்கூடும்

அமெரிக்க டாலரின் மதிப்பான சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து இதுவரை எட்டாத உச்சத்தை எட்டி இருக்கிறது. இது நாளடைவில் உலக சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தால், சில நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளன. 

நடக்கப்போகும் நல்ல விஷயம் 

உலக மனிதர்களை அச்சுறுத்தும் சில அரியவகை நோய்களுக்கு  இந்த ஆண்டில் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கண்டறியப்படும். குறிப்பாக தொழில்நுட்பம் மருத்துவ துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க: கிரீன்லாந்தை 'கைப்பற்ற' டிரம்ப் திட்டம்.. எச்சரிக்கும் டென்மார்க்! நேட்டோ ரியாக்சன்

மேலும் படிக்க: பட்ஜெட்டை பதம் பார்க்காத இந்த 5 ஐரோப்பிய நாடுகள்... 2026-இல் மஜாவா சுற்றுலா போங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News