பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த பெருகிவரும் கோபத்திற்கு மத்தியில், பாலியல் பலாத்கார வழக்குகளில் (Rape Cases) அதிகபட்ச தண்டனையை ஆயுள் தண்டனையிலிருந்து மரண தண்டனையாக (Death Penalty) உயர்த்துவதற்கான சட்ட திருத்தத்திற்கு பங்களாதேஷ் (Bangladesh) அரசு ஒப்புதல் அளித்தது.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் வாராந்திர கூட்டத்தில் இந்த திருத்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை செயலாளர் காண்ட்கர் அன்வாருல் இஸ்லாம் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அடக்குமுறை தடுப்புச் சட்டம் என்ற தலைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பாராளுமன்றம் (Parliament) அமர்வில் இல்லாததால், அதிபர் அப்துல் ஹமீத் ஒரு கட்டளை பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்று அமைச்சரவை செயலாளர் கண்டக்கர் அன்வரூல் இஸ்லாம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
"இந்த உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும்" என்று சட்ட அமைச்சர் அனிசுல் ஹுக் பின்னர் bdnews24 இடம் கூறினார்.
நோகாலியில் ஒரு பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சில்ஹெட்டின் எம்.சி கல்லூரியில் மற்றொரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிராக டாக்காவின் ஷாபாக் சதுக்கத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டங்களை அடுத்து இந்த ஒப்புதல் வந்துள்ளது.
ALSO READ: மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த TRB ஜவான்!!
கடந்த 16 ஆண்டுகளில் பங்களாதேஷில் 4,541 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் இதில் 60 சம்பவங்களில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாயங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை வங்கதேசத்தில் குறைந்தது 889 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக உரிமைகள் குழு ஐன் ஓ சலிஷ் கேந்திரா தெரிவித்தது.
இந்த காலகட்டத்தில் 192 பேர் கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்று bdnews24 தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் போலீசில் புகார் செய்யாததால், எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் நம்புகின்றனர்.
ALSO READ: Coimbatore Horror: பெண்ணே ஜாக்கிரதை, நண்பன் என்ற பெயரில் நரிகள் நடமாடும் உலகம் இது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR