இந்தியாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா! 500% வரி விதிக்க டிரம்ப் பச்சைக்கொடி!

US 500% Tariff Threat: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்கும் புதிய மசோதாவிற்கு டிரம்ப் ஒப்புதல். அடுத்த வாரம் செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு இந்த மசோதா வரக்கூடும் என எதிர்பார்ப்பு. இந்தியா, சீனாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 8, 2026, 01:10 PM IST
  • ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க மசோதா தயார்.
  • இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் வாஷிங்டனின் நேரடி கண்காணிப்பில் உள்ளது.
  • ரஷ்யாவின் போர் நிதி ஆதாரத்தை முடக்க அமெரிக்காவின் இரு கட்சிகளும் இணைந்து இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளன.
இந்தியாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா! 500% வரி விதிக்க டிரம்ப் பச்சைக்கொடி!

US - India Trade: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மாஸ்கோவை பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா தனது அழுத்தத்தை மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 500% வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் இருகட்சி மசோதாவிற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

500% வரை இறக்குமதி வரி

இந்த முன்மொழியப்பட்ட சட்டம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் யுரேனியம் வாங்கும் நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக, ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் அதிகளவில் எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வாஷிங்டனின் முக்கிய கவலையாக உள்ளன.

அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த பிறகு, இந்த மசோதாவிற்கு அவர் ஒப்புதல் அளித்திருப்பதாக செனட்டர் கிரஹாம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமே இந்த மசோதா செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு வரக்கூடும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க முயற்சி

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு அதிபரின் அதிகாரத்தை இந்த சட்டம் வலுப்படுத்தும் என்று கிரஹாம் கூறியுள்ளார். உக்ரைன் அமைதி முயற்சிக்கு ஒத்துழைத்தாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எந்த விட்டுக்கொடுத்தலுக்கும் முன்வராததால், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க இத்தகைய கடுமையான நடவடிக்கை அவசியம் என்று அவர் வாதிட்டார்.

இந்தியாவை குறி வைக்கும் அமெரிக்கா

தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் வாங்குபவராக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியப் பொருட்களுக்கு 25% பரஸ்பர வரியையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான கூடுதலாக 25% அபராதத்தையும் டிரம்ப் நிர்வாகம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சில பொருட்களின் மீதான வரி ஏற்கனவே 50% ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா - இந்தியா உறவில் மேலும் விரிச்சல்?

புதிய மசோதா ஒப்புதல் பெற்றால், அமெரிக்கா - சீனா மற்றும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளில் மேலும் விரிசல் ஏற்படக்கூடும். ஏற்கனவே சீனப் பொருட்கள் மீது 145% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக பெய்ஜிங்கும் வரி விதித்துள்ளது. இந்த புதிய பொருளாதாரத் தடைகள் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்

- இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவுடன் எரிசக்தி வணிகத்தைத் தொடரும் நாடுகள் மீது 500% வரை அபராத வரி விதிக்க டிரம்பிற்கு அதிகாரம் கிடைக்கும்.

- ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் பணம், மறைமுகமாக மாஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு நிதி வழங்குகிறது என்பது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாதமாக உள்ளது.

- இந்த மசோதா செனட்டர் கிரஹாம் (குடியரசுக் கட்சி) மற்றும் ரிச்சர்ட் புளூமெண்டல் (ஜனநாயகக் கட்சி) ஆகியோரால் கூட்டாக முன்மொழியப்பட்டுள்ளது. இது ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது.

மேலும் படிக்க - 2026ல் காத்திருக்கும் பேரழிவுகள்.. பயமுறுத்தும் பாபா வங்கா கணிப்புகள்! முழு விவரம்

மேலும் படிக்க - கிரீன்லாந்தை 'கைப்பற்ற' டிரம்ப் திட்டம்.. எச்சரிக்கும் டென்மார்க்! நேட்டோ ரியாக்சன்

மேலும் படிக்க - 2025இல் டிரம்ப் தாக்குதல் நடத்திய நாடுகள் எத்தனை தெரியுமா? இதுல நோபல் பரிசும் வேணுமாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News