)
Lottery For Kerala Lady: லாட்டரி என்பவது ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடியது. அது நேர்மாறாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். ஆனால், லாட்டரி மோகத்தால் இழப்புகளும் அதிகமாக இருக்கும். எனவேதான், 2003ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. இன்னும் நீள்கிறது.
Lottery For Kerala Lady: அபுதாபியில் அடித்த லாட்டரி
ஆனால், லாட்டரி சீட்டு விற்பனை என்பது நமது அண்டை மாநிலம் கேரளா முதல் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் சட்டப்பூர்வமாக இருந்து வருகிறது, மக்களிடமும் அதிக வரவேற்பு இருக்கிறது. இதுபோன்ற லாட்டரி சீட்டுகள் இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியேவும் பல நாடுகளில் உள்ளது. அப்படியிருக்க, ஐக்கிய அரபு அமீரகத்திலும் லாட்டரி நடைமுறை இருந்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் தற்போது கேரள ஜோடிக்கு லட்சக்கணக்கில் லாட்டரி விழுந்துள்ளது. இதனால் அவர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
Lottery For Kerala Lady: கேரளா பெண்ணுக்கு விழுந்த லாட்டரி
கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜா நந்தகுமார் எழுவத் என்ற 45 வயது பெண்மணி கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து அபுதாபியில்தான் வசித்து வருகிறார். இவருக்குதான் இப்போது லாட்டரி அடித்துள்ளது. ஆனால், அவர் லாட்டர் வாங்கவில்லையாம். அதில்தான் ட்விஸ்ட்டே... ஸ்ரீஜா நந்தகுமாரின் கணவர்தான், ஸ்ரீஜாவின் பெயரில் லாட்டரி சீட்டை வாங்கி உள்ளாராம்.
அபுதாபியில் Big Ticket Abu Dhabi என்ற தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி நடக்கும். இந்த நிகழ்ச்சியில்தான் லாட்டரியை வென்றவர்கள் யார் என்பதும் அறிவிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை ரிச்சர்ட் - பவுச்ரா ஆகிய இரண்டு தொகுப்பாளர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இவர்கள் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாலே, மறுமுனையில் இருப்பவர் லாட்டரி வென்றுவிட்டார் என அர்த்தம். அப்படிதான், ஸ்ரீஜா நந்தகுமாருக்கும் தொலைப்பேசியில் அழைப்பு வந்துள்ளது.
Lottery For Kerala Lady: ரூ.35 லட்சம் லாட்டரி
தொகுப்பாளர் ரிச்சர்ட் தகவலை கூறியதும் ஸ்ரீஜா நம்பவே இல்லை. ஏனென்றால் அவர்தான் லாட்டரியை வாங்கவே இல்லையே... உடனே அவரது கணவரிடம் விசாரித்ததில் லாட்டரியை அவர் வாங்கியிருக்கிறார் என தெரியவந்திருக்கிறது. லாட்டரியில் ஸ்ரீஜாவுக்கு 1,50,000 திராம் பரிசு கிடைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 35 லட்சத்திற்கும் மேல் வருகிறது எனலாம்.
இந்த ஜோடி கடந்த 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முயற்சித்து கடைசியாக இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார்களாம். சில சமயங்களில் நண்பர்களோடு கூட்டு சேர்ந்தும் வாங்குவார்களாம். இந்த முறை லாட்டரி முடிவுகள் அறிவிப்பதற்கு ஒருநாள் முன்னாடிதான் அவரது கணவர் 054565 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
Lottery For Kerala Lady: லாட்டரி பணத்தில் என்ன செய்யப்போகிறார்கள்?
இதுகுறித்து ஸ்ரீஜா கூறுகையில், "உண்மையை சொல்ல வேண்டும் என்றால், லாட்டரியில் எனக்கு பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. எப்போதும் ஒவ்வொரு மாதமும எனது கணவர்தான் லாட்டரியை வாங்குவார். லாட்டரி எங்களுக்கு அடித்துவிட்டதாக தொலைப்பேசியில் தகவல் வந்ததும், நான் அதிர்ச்சியாகிவிட்டேன், அதை நம்பவே இல்லை. முதலில் இது ஏதோ மோசடி வலை என்றே எண்ணின்னேன். எனக்கு இப்போதும் இதை நம்பலாமா, வேண்டாமா என்ற சிந்தனை இருந்துகொண்டே இருக்கிறது" என்கிறார்.
மேலும், இந்த பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என இன்னும் திட்டமிடவில்லை என கூறும் இந்த ஜோடி, வரும் காலங்களிலும் தொடர்ந்து லாட்டரி சீட்டை வாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், மற்றவர்களும் விடாமுயற்சியோடு, நம்பிக்கையோடு லாட்டரியை வாங்குங்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ