உடலுறவு... 14 வயது மாணவன் வீட்டில் பலமுறை எகிறி குதித்த ஆசிரியை - 50 ஆண்டுகள் சிறை!

World Bizarre News: அமெரிக்காவின் 14 வயது சிறுவனின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமால் சென்று பலமுறை உடலுறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 8, 2024, 05:18 PM IST
  • அவர் கடந்தாண்டு ஜூன் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
  • அவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் உறுதியானது.
  • மேலும் அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
உடலுறவு... 14 வயது மாணவன் வீட்டில் பலமுறை எகிறி குதித்த ஆசிரியை - 50 ஆண்டுகள் சிறை!

World Bizarre News: அமெரிக்காவின் விர்ஜினியாவுக்கு அருகே உள்ள ஹென்ரிக்கோ கவுண்டியின் பள்ளி ஆசிரியை ஒருவர், தன்னிடம் பயிலும் 14 வயது மாணவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான மேகன் பாலைன் ஜார்டன் என்ற அந்த பெண்மணி ஹங்கேரி கிரீக் நடுத்தர பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

14 வயது பள்ளி மாணவரின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் சென்றது, அந்த சிறுவனுடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்குதான் என ஜார்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஹென்ரிகோ கவுண்டி காமன்வெலத் அட்டார்னி ஷனான் டெய்லர் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில்,"2022-23 கல்வியாண்டில், ஜார்டன் 14 வயது மாணவருடன் உடலுறவு வைத்துக்கொண்டது உறுதியாகிறது" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மைனர் சிறுவனிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜார்டனுக்கு 50 வருட சிறைத்தண்டனை வழங்கியும் உத்தரவிடப்பட்டது. மேலும் நீதிமன்றம் அதன் உத்தரவில்,"ஜார்டன், பாதிக்கப்பட்ட மாணவனின் வீட்டிற்கு பலமுறை சென்று உடலுறவு மேற்கொண்டுள்ளார். அந்த மாணவனின் படுக்கையில் ஜார்டனின் மரபணு சார்ந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிருகத்தை (ஜார்டனை) பொதுமக்கள் மத்தியில் அகற்றியதற்கு நன்றி என போலீசாருக்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | விமானத்திலும் ஜோடிகள் அட்ராசிட்டிஸ் - ஆணுறைகள், அழுக்கான உள்ளாடைகள் - பணியாளர் வேதனை

விரிஜினியா சட்டத்தின்படி, 17 வயதுக்கு குறைவானவர்களுடன் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜார்டனை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்டனுக்கு ஏற்கெனவே திருமணமானது குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில், ஹென்ரிகோ கவுண்டிய சேர்ந்த 14 வயது மாணவனுடன், வயது வந்த ஒரு நபர் தகாத செயல்களில் ஈடுபட்டதாக ஹென்ரிகோ காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்து விசாரணை தொடங்கப்பட்டது. 

இந்த வழக்கில், மைனருக்கும், அந்த வயது வந்தவருக்கும் இடையிலான பாலியல் செயல்கள் தொடர்பான ஆதாரங்கள், போதுமான தகவல்களை ஆகியவை குற்றப்பத்திரைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்து கடந்தாண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சில், ஆசிரியை ஜோர்டனின் கைது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது மற்றும் வருத்தமளிக்கும் சூழல் எனவும் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக, அமெரிக்காவின் கொலராடோவில் 15 வயது சிறுவர்கள் இருவருடன் உடலுறவு வைத்துக்கொண்ட 38 வயது அமெரிக்க பெண் ஒருவரை குற்றவியல் பாலியல் நடத்தை காரணமாக போலீசார் கைது செய்திருந்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அலிசன் என்ற அந்த பெண் கடந்த பிப். 1ஆம் தேதி அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மூன்றாம் மற்றும் நான்காம் நிலை குற்றவியல் பாலியல் நடத்தை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

மேலும் படிக்க | கணவனின் பிணத்துடன் குடும்பம் நடத்திய அமானுஷ்ய பெண்... அதுவும் 4 வருஷமாக... காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News