பயங்கர பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய குழந்தைகள்! வைரலாகும் வீடியோ..

Viral Video Of Kids Using Snake As Skipping Rope : சில குழந்தைகள், இறந்து போன பாம்பை வைத்து ஸ்கிப்பிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 10, 2025, 04:53 PM IST
  • பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக பயன்படுத்திய சிறுவர்கள்..
  • அது ஒரு கருப்பு நிற தலைகொண்ட பாம்பு..
  • வைரலாகும் வீடியோ..
பயங்கர பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய குழந்தைகள்! வைரலாகும் வீடியோ.. title=

Viral Video Of Kids Using Snake As Skipping Rope : நம் அடிவயிற்றை கலக்க வைக்கும் அளவிற்கு அச்சுறுத்தும் வீடியோக்கள், இணையத்தில் எண்ணிலடங்காமல் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை பார்க்கும் போது, “நம் உலகம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது” என கேட்க தோன்றுகிறது. அதிலும், வாயற்ற விலங்குகளை சிலர் துன்புறுத்துவதை பார்க்கும் போது, மனமே உடைந்து போகிறது. அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஏதோ ஒரு கயிறை வைத்துக்கொண்டு கயிறு தாண்டுதல் (ஸ்கிப்பிங்) விளையாடுவது போலதான் இருக்கிறது. ஆனால், கொஞ்சம் உற்று பார்த்தால்தான் தெரிகிறது இவர்கள் கையில் இருப்பது கயிறல்ல, ஒரு முழு நீள பாம்பு என்று.

அந்த வீடியோ ஆரம்பிக்கும் போது குழந்தைகள் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் ஸ்கிப்பிங் விளையாடுகின்றனர். இதை வீடியோ எடுத்துக்கொண்டிருப்பவர், “அது என்னவென்று எனக்கு காண்பியுங்கள்..” என்று இரு முறை சிரித்துக்கொண்டே கேட்கிறார். அந்த குரல், ஒரு பெண்ணின் குரலாகும். அந்த குழந்தைகள் சிரித்துக்கொண்டே தங்கள் வேலையை தொடர, அவர்களின் குழுவில் இருந்த ஒரு சிறுவன் மட்டும் இது ஒரு கருப்பு நிற தலை கொண்ட மலைப்பாம்பு என்கிறார். இந்த பாம்பு, குழந்தைகள் கயிறாக உபயோகிப்பதற்கு முன்னரே இறந்து கிடந்ததா, அல்லது அதன் பிறகு இறந்ததா என்பது தெரியவில்லை. 

வலுக்கும் எதிர்ப்பு!

இந்த வீடியோ, இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பலர் கண்டன குரல்களை எழுப்பினர். சிலர் இணையத்தில் தேடியதில் இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் உள்ள வூராபிந்தா எனும்  இடத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த நகரின் சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுலாத்துறை, அறிவியில் துறை என அனைத்து துறை சார்ந்தவர்களும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவிற்கு கீழ், நெட்டிசன்களும் கமெண்டுகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். ஒருவர், இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூற, இன்னும் சிலர் இப்படி அந்த ஊரில் வாழும் விலங்குகளை துன்புறுத்துவது பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்று கூறி வருகின்றனர். 

இப்படி இறந்து போன பாம்பிற்கு, மரியாதை தராமல் புதைப்பது மனதை மிகவும் புண்படுத்தும் வகையில் உள்ளது என ஒருவர் கமண்ட் செய்துள்ளார். சிறுவர்களே இப்படி செய்வது வேதனைக்குரிய விஷயமாக உள்ளதாகவும், இப்படி செய்ததற்கு அந்த சிறுவர்களை அழைத்து கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க | பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | மருத்துவமனை Bill-ஐ பார்த்தவுடன் கோமாவில் இருந்து எழுந்த இளைஞர்! வைரலாகும் வீடியாே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News