இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணித்தால் நட்புறவு பாதிக்கும் என்று இந்தியாவிற்கு சீன அரசு மீடியா எச்சரிக்கை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் நடவடிக்கைளுக்கு சீனா தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லையிலும் பிரச்சனை செய்து வருகிறது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திராவின் கிளை நதியை சீனா மறித்து அணை கட்டிவருகிறது. பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2001-ம் ஆண்டே உலகளாவிய தடை விதித்தது. ஆனால் அந்த அமைப்பின் தலைவனான மசூத் அசார் மீது தடை விதிக்கும் முடிவை சீனா நிறுத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் எச்சரிக்கையை மீறி சீனா செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் இந்தியாவின் முயற்சிக்கு தடை விதிக்கும் -சீனாவின் பொருட்களை நிராகரியுங்கள்- என்ற பிரச்சாரமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த விழா காலங்களில் சீன தயாரிப்பு பொருட்களை நிராகரியுங்கள் என்று மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரச்சாரம் வலுப்பெற்று உள்ளது.


இந்நிலையில் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிப்பது இருதரப்பு நட்புறவை பாதிக்கும் என்று இந்தியாவிற்கு சீன அரசு மீடியா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அரசியல் காரணத்திற்காக இந்தியாவில் சீன நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு பிரச்சாரமானது இந்தியா - சீனா வர்த்தக பற்றாக்குறைக்கு உதவியாக இருக்காது, மாறாக இருதரப்பு நட்புறவை பாதிக்கும் என்று சீனாவின் அரசு மீடியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.