நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்... அமெரிக்காவை மிரட்டும் சீனா

தைவான் சீனாவின் ஒரு பகுதி என தொடர்ந்து பெய்ஜிங் வலியுறுத்தி வரும் நிலையில், பெலோசி தைவானுக்குச் சென்றால், அது “சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும்” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2022, 08:13 PM IST
  • பெலோசியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை.
  • தைவான் சீனாவின் ஒரு பகுதி என தொடர்ந்து பெய்ஜிங் வலியுறுத்தி வருகிறது.
  • தைவான் விஷயத்தில் தலையிட்டால், சீன மக்கள் விடுதலை இராணுவம் ஒருபோதும் சும்மா இருக்காது.
நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்... அமெரிக்காவை மிரட்டும் சீனா title=

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி திங்களன்று சிங்கப்பூரில்,  ஆசியா சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இந்நிலையில், சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால் " ராணுவம் சும்மா இருக்காது" என்று மிரட்டியுள்ளது. பெலோசியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அதில் தைவான் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் ஊகத்தின் அடிப்படையில் சீனா இவ்வாறு மிரட்டியுள்ளது.  

தைவான் சீனாவின் ஒரு பகுதி என தொடர்ந்து பெய்ஜிங் வலியுறுத்தி வரும் நிலையில், பெலோசி தைவானுக்குச் சென்றால், அது “சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும்” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.

மேலும் படிக்க | இந்திய ராணுவத்துடன் நேரிடையாக மோத அஞ்சி, ஹேக்கர்கள் உதவியை நாடும் சீனா

தைவான் விஷயத்தில் தலையிட்டால், சீன மக்கள் விடுதலை இராணுவம் ஒருபோதும் சும்மா இருக்காது, சீனா தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியான பதில்களையும் வலுவான எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை நாங்கள் மீண்டும் அமெரிக்காவிடம் கூற விரும்புகிறோம்" என்று ஜாவோ கூறினார். 

கடந்த வியாழன் அன்று ஒரு தொலைபேசி அழைப்பின் போது, ​​சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எச்சரித்தார்.  வாஷிங்டன்  தைவானை உள்ளடைக்கிய ஒரே சீனா என்னும் கொள்கைக்கு கட்டுப்பட வேண்டும் மற்றும் "நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள்" எனவும் எச்சரித்தார்

சமீப நாட்களில், தைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது தொடர்பாக சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவான் ராணுவ ரீதியாக வலுப்பெறுவதை விரும்பாத சீனா, சுமார் $108 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Russia Ukraine War: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News