சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது, 56 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் தற்போது வரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14 ஆயிரத்து 500 பேருக்கு நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ், இந்தியாவில் பரவாமல் தடுக்க, மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்தநிலையில், சீனர்கள் மற்றும், சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கும் இ-விசா வசதியை நிறுத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 25 நாடுகளுக்கு பரவியுள்ள கொடூரமான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு சீனாவை சேர்ந்தவர்கள், சீனப் பயணிகள் மற்றும் அங்கிருந்து இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினருக்கான இ-விசா வசதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.


இந்நிலையில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது, 56 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹூபே சுகாதார அதிகாரசபையின்படி, மாகாணத்தில் கூடுதலாக 2,103 கொரோனா வைரஸ் வழக்குகளை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 9,618 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 478 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.


கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் வுஹானில் டிசம்பர் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது, பின்னர் இது 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.