)
Non Vegetarian Milk: சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பால் என்பது அனைவருக்குமான உணவாகிவிட்டது. பால் அத்தியாவசிய பொருள்களில் ஒன்று எனவும் கூறலாம். பேரிடர் காலங்களில் கூட மக்கள் பால் கிடைத்தால் போதும் என நினைப்பது உண்டு. ஆற்றலை அளிக்கும் பாலில் புரதம், கால்சியம், புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இந்தியா போன்ற சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் நாட்டில் புரதத்தை அளிக்கும் உணவாக பால் இருக்கிறது.
பால் என்பது உணவு என்பதை தாண்டி, மக்களின் ஆன்மீகத்திலும் பாலுக்கு முக்கிய இடம் இருக்கிறது எனலாம். பசு தெய்வமாக இந்துக்களால் வழிபடப்படுகிறது. பசுவில் இருந்து வந்தாலும் அதை சைவ உணவாகவே பலரும் உட்கொள்கின்றனர். இது ஒருபுறம் இருக்க தற்போது அசைவ பால் என்பதும் டிரெண்டிங்கில் உள்ளது. அதாவது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அசைவ பாலில் பெரியளவு வணிகம் ஒப்பந்தம் நடைபெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அது என்ன அசைவ பால் என கேட்கிறீர்களா...? அதைதான் இங்கு விரிவாக பார்க்கப்போகிறோம்.
இந்தியாவில் மாட்டுப்பாலை சைவாக கருதினாலும் கூட அது அசைவ உணவிலேயே சேரும். இருப்பினும், அமெரிக்க பசுக்களின் பால் பற்றி நாம் பேசும்போது இந்த சொல் தவறில்லை என்றே சொல்லலாம். விலங்கு பொருட்களுடன் கலந்த உணவை உண்ணும் பசுக்களின் பாலைக் குறிக்கவே அசைவ பால் என சொல்லப்படுகிறது. எளிமையாக சொல்வது என்றால், இறைச்சியை உணவாக கொள்ளும் மாடுகளிடம் இருந்தும், ரத்தம் சார்ந்த பொருள்களை உணவாக கொள்ளும் மாடுகளிடம் இருந்தும் பெறும் பாலை அசவைப் பால் எனலாம்.
இந்தியாவில் பசுக்களுக்கும், மாடுகளுக்கும் அப்படி தீவனம் கொடுக்க மாட்டார்கள் அல்லவா...! பெரும்பாலும் நம் நாட்டில் பசுக்கள் உள்பட அனைத்து மாடுகளையும் புறவெளியில் மேய்ச்சலுக்கு விடுவார்கள். அவை புல், இலை, தலைகளை உண்ணும். இன்னும் சிலர் உலர்ந்த வைக்கோல், பசுந்தீவனம், சோளம், கோதுமை தானியங்கள், தவிடு ஆகியவற்றை உணவாக அளிப்பார்கள். இன்னும் சில பண்ணைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீவனங்களை கூட அளிக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் சைவ தீவனங்கள்தான். இந்தியாவில் இன்னும் அசைவ தீவனங்கள் மாட்டிற்கு அளிக்கப்படுவதில்லை.
அமெரிக்காவில் விவசாயிகள் அவர்களின் பசுக்களுக்கு அசைவ உணவுகள் கலந்த தீவனத்தை கொடுக்கிறார்கள். இதனால் பசுக்களின் எடை அதிகரிக்கிறது. பன்றி, மீன், குதிரை, பூனை, நாய், கோழி ஆகியவற்றின் இறைச்சியை கொண்டு மாடுகளுக்கு இந்த அசைவ தீவனம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பசுக்கள் பெரும்பாலும் இலை, தளைகள், புல்லை சாப்பிடுபவை, அதாவது அவை தாவர உண்ணிகள் எனலாம். ஆனால் அவற்றுக்கு அசைவ உணவை தீவனமாக கொடுப்பதாலேயே அவை அசைவ பாலாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டுமின்றி சில ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், தாயலாந்து, பிரேஸில் போன்ற நாடுகளில் அசைவ தீவனங்களை பசுக்களுக்கு கொடுக்கின்றனர். மேலும், இந்த அசைவ பாலை ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சாதரணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த அசைவ பால் மனிதர்களுக்கு நல்லதா கெட்டதா என்ற கேள்வி எழுவதும் இயல்புதான். தற்போது நடந்துள்ள சில ஆய்வுகளின்படி அசைவ பாலை குடிப்பதால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் இல்லை, அவற்றிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ