)
Gaza Parle-G Biscuit Viral Post: கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல் காரணமாக காசா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பசியும், பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. சிறுகுழந்தையும் உணவுக்காக திண்டாடி வருகிறது. உயிரிபிழைப்பதே கடினமாகிவிட்டது.
Israel Hamas War: 2023 அக்டோபரில் இருந்து...
அப்படியிருக்க, இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பிஸ்கட், காசாவில் ஒரு விலை மதிப்பான பொருளாக உள்ளது. இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் Parle-G பிஸ்கட், காசாவில் சுமார் ரூ.2,300 ஆக விற்கப்படுகிறதாம். ஏன் சாதாரண 5 ரூபாய் பிஸ்கட் இவ்வளவு விலை உயர்த்தி அங்கு விற்கப்படுகிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. அப்போது இருந்தே காசா பகுதியில் பல்வேறு தாக்குதல்களால் மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தனர். உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதாரப் பிரச்னையும் ஒருபுறம் என போர் அவர்களின் வாழ்வையே சுடுகாடாகிவிட்டது.
Gaza Parle-G Biscuit: மகளுக்காக தந்தை செய்த செயல்
போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சமீபத்தில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. காசாவில் வசிக்கும் முகமது ஜவாத் என்பவர் Parle-G பிஸ்கட் பாக்கெட்டை 24 ஈரோவுக்கு (ரூ. 2,342) வாங்கியதாகப் பகிர்ந்து கொண்டார். இந்த பதிவை கண்டு பல இந்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
After a long wait, I finally got Ravif her favorite biscuits today. Even though the price jumped from €1.5 to over €24, I just couldn’t deny Rafif her favorite treat. pic.twitter.com/O1dbfWHVTF
— Mohammed jawad (@Mo7ammed_jawad6) June 1, 2025
முகமது ஜவாத் அவரது X பதிவில், "நீண்ட காத்திருப்புக்கு பிறகு, இன்று நான் இறுதியாக ரவீஃப்பிற்கு பிடித்த பிஸ்கட்களை வாங்கிவிட்டேன்," என்று குறிப்பிட்டுள்ளார். ஜவாத் தனது மகள் ரவீஃப்பை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், "விலை 1.5 ஈரோவில் இருந்து 24 ஈரோவுக்கு மேல் விலை உயர்ந்தாலும், ரவீஃப்பிற்கு பிடித்த உணவை என்னால் மறுக்க முடியவில்லை" என குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அங்கு 146 ரூபாயில் இருந்து தற்போது 2,342 ரூபாய்க்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Gaza Parle-G Biscuit: அத்தியாவசிய பொருள்களுக்கு கொள்ளை விலை
காசாவின் எத்தனை பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது என்பதை இந்த வைரல் பதிவு சுட்டிக்காட்டுகிறது. அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூட வாங்க மக்களால் வாங்க முடியாத அளவிலும், மக்களுக்கு அரிதாகவுமே கிடைக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை, பாலஸ்தீனத்தில் கடுமையான தாக்குதல்கள் நடந்தன. தொடர்ச்சியான சர்வதேச அழுத்தத்திற்குப் பிறகே மனிதாபிமான பொருள்களை கொண்ட லாரிகள் இஸ்ரேலால் காசாவிற்குள் அனுமதிக்கப்பட்டன. மேலும் அந்த உதவி போதுமானதாகவும் இல்லை.
ஆனால், இந்த உணவுப் பற்றாக்குறை கள்ளச் சந்தையை அங்கு உருவாக்கி உள்ளது. உதவியாக அனுப்பப்படும் உணவுப் பொருள்கள், அதிக விலைக்கு மீண்டும் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. Parle-G பிஸ்கட் ஒரு உதாரணம்தான். அத்தியாவசியப் பொருட்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை கிட்டத்தட்ட 5,000 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 2,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
காசா இப்போது பஞ்சம் போன்ற நிலைமைகளை எதிர்கொள்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்ற. இதில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் சுத்தமான நீர், மருந்து மற்றும் உணவு கிடைப்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ