Israel Iran War News In Tamil: ரஷ்யா, சீனாவை பார்த்து டிரம்ப் பயப்படுகிறாரா? 2 வாரம் அவகாசம் எதற்கு? இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் போரில் அமெரிக்கா களம் இறங்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில், அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கை நேற்று மாலை திடீரென வெளியிடப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி அதாவது டிரம்ப் "இரண்டு வாரங்கள் காத்திருப்பார்" என்று வெள்ளை மாளிகை கூறியது. ராஜதந்திர முயற்சிக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் அளிப்பார். அதன் பிறகு தாக்கலாமா? வேண்டாமா? என்பதை அவர் முடிவு செய்வார் எனக் கூறப்பட்டு உள்ளது. இதனையடுத்து என்ன நடக்கப்போகிறது? அமெரிக்காவின் திட்டம் என்ன? இஸ்ரேல் ஈரான் போர் குறித்து பார்ப்போம்.
அமெரிக்கா இரண்டு வாரங்கள் அவகாசம் தருவதாகச் சொல்லும்போது, இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் இருக்காது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் எதிர்பாராத விதமாக ஒருநாள் இரவு தூங்கும்போது அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசிவிட்டு செல்லலாம். ஏனென்றால் நேட்டோ இராணுவம் கடாஃபிக்கு எதிராக அனுப்பப்பட்டு அவர் கொல்லப்பட்டபோதும், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, குண்டு வீசப்பட்டது. நஸ்ருல்லா கொல்லப்பட்டார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதற்கு பின்னா அமெரிக்கா இருந்தது. அதேபோல 2 வாரம் அமைதி எனக் கூறிவிட்டு, திடீரென தாக்குதல் நடத்தலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது இரண்டு வாரங்கள் என அமெரிக்கா கூறுவது இரண்டு விதமான அர்த்தம் இருக்கிறது. ஒன்று 2 வாரம் ஈரானுக்கு அவகாசம் கொடுக்கலாம் அல்லது எதிர்பாராமல் தாக்குதல் நடத்தலாம்.
ஆனால் இஸ்ரேல் மற்றும் ஈரானில் நிலைமை நன்றாக இல்லை. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இஸ்ரேலுக்கு உள்ளேயும், ஈரான் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அதிகாலையில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகி வருகிறது. சில ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன, அவை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன எனக் கூறப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதாகவோ அல்லது வீடியோ எடுப்பதாகவோ இஸ்ரேலிய செய்தித்தாள்களில் செய்தி வெளியானதை அடுத்து, இந்தச் செய்தி வெளியே போகாமல் இருக்க இஸ்ரேலில் காவல்துறை அவர்களைக் கைது செய்கிறது.
பத்திரிகையாளர்கள் எதிரிக்கு உதவுவதாக இஸ்ரேல் சொல்கிறது. அதாவது, போரின் போது தகவல்களை சேகரிப்பது, அதை வெளியிடுவதன் மூலம், இஸ்ரேல் இழப்புகளைச் சந்திக்கிறது என எதிரிக்கு தெரிந்துவிடும். இதனால் தான் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்கிறது.
அமெரிக்கா "இரண்டு வாரங்கள்" எடுத்துக் கொண்டதற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம். அமெரிக்கா மீது நிறைய அழுத்தம் உள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவின் அறிக்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டால், இருவரும் தொடர்ந்து அமெரிக்காவை விமர்சித்து வருகின்றனர்.
நீங்கள் (அமெரிக்கா) ஒரு போரைத் தொடங்கினால், அது எதையும் குறிக்கலாம் என அமெரிக்காவை நோக்கி நேரடியாக எச்ச்ரித்து வருகின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அறிக்கையை நான்கு புள்ளிகளில் பார்த்தால், முதலில், நடந்து கொண்டிருக்கும் போர் நிறுத்தத்தை முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இரண்டாவது பொதுமக்களின் பாதுகாப்பு, அதாவது, இரு தரப்பிலிருந்தும் சாதாரண குடிமக்கள் மீது விழும் குண்டுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். ஈரானில் 600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஈரான் தனது தகவல்களை மறைக்கவில்லை. எனவே, அங்கு 600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், இஸ்ரேலிலும் இதற்குக் குறையாமல் இறந்திருப்பார்கள். எனவே, இஸ்ரேல் அல்லது ஈரான் அல்லது உலகில் எங்கும் பொதுமக்கள் இறந்தால் அது தவறு. தவறு செய்யாதவர்கள் மற்றும் போரில் ஈடுபடாதவர்கள் எந்த வகையிலும் குறிவைக்கப்படக்கூடாது.
மூன்றாவது என்னவென்றால், தொடர்ச்சியான உரையாடல் இருக்க வேண்டும். மேலும் கடைசி விஷயம் என்னவென்றால், சர்வதேச சமூகம் போரை ஊக்குவிக்கக்கூடாது, மாறாக அமைதியை ஊக்குவிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையேயும் முழு மத்திய கிழக்கிலும் அமைதியைப் பேணுவதற்கு அமைதியை ஊக்குவிக்க வேண்டும் என சீனா அதிபர் கூறியுள்ளார்.
ரஷ்யா நேற்று மிகத் தெளிவாகச் சொன்னது. உங்கள் தரப்பிலிருந்து ஈரானைத் தாக்கினால், உலகம் முழுவதும் அணுசக்தி அழிவு ஏற்படலாம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா, சீனாவை அடுத்து மற்றொரு நாடும் களத்திற்கு வந்துள்ளது. அவர் வட கொரியாவின் ஜனாதிபதி. அவருடைய அறிக்கையும் வந்துவிட்டது. இஸ்ரேலைப் புற்றுநோய் என்று அவர் அழைத்திருக்கிறார். மேலும் மத்திய கிழக்கை மட்டுமல்ல, முழு உலகத்தையும் மெதுவாக அழிவை நோக்கி அழைத்துச் செல்வது புற்றுநோய்தான் என்றும் கூறியுள்ளார்.
சீனா, ரஷ்யா, வட கொரியா, எவ்வளவு சிறிய நாடாக இருந்தாலும், மூன்று நாடுகளுமே அணுசக்தியைக் கொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவற்றில் ஏதேனும் ஒன்று அணுசக்தியைப் பயன்படுத்தினால், மிகப்பெரிய அழிவு ஏற்படும். மேலும் ஒரு பக்கத்திலிருந்து அணுகுண்டு பயன்படுத்தப்பட்டால், மறுபுறம் அணுகுண்டு பயன்படுத்தப்படும் என்பது உறுதி.
மேலும் படிக்க - இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









