பாலியல் தொல்லை... டிரம்பின் அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கிய சிறுமி - பின்னணி என்ன?

Epstein Files: ஒரு சிறுமியை வாய்வழி பாலியல் உறவுக் கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், அப்போது அவரது அந்தரங்க உறுப்பில் அந்த சிறுமி கடித்து தாக்கியதாகவும் எப்ஸ்டீன் பைல்ஸில் பதிவாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 1, 2026, 08:06 PM IST
  • எப்ஸ்டீன் பைல்ஸ் 3.5 மில்லியன் பக்கங்கள் வெளியாகின.
  • இதில் ஆயிரக்கணக்கான முறை டிரம்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இச்சம்பவம் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.
பாலியல் தொல்லை... டிரம்பின் அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கிய சிறுமி - பின்னணி என்ன?

Epstein Files: சுமார் 6 மில்லியன் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் பைல்ஸ் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பரில் Epstein Files Transparency Act சட்டம் நிறைவேறியது, இதன்மூலம் எப்ஸ்டீன் பைல்ஸ் பொதுவெளிக்கு வருவது உறுதியானது. 

Add Zee News as a Preferred Source

Epstein Files: பரபரப்பை கிளப்பும் எப்ஸ்டீன் பைல்ஸ்

ஆரம்ப காலகட்டத்தில் எப்ஸ்டீன் பைல்ஸ் என்பது ஜனநாயக கட்சியினரால் உருவாக்கப்பட்ட போலியான ஆவணங்கள் என்ற குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் முன்வைத்தார். ஆனால், கடந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனது நிலைபாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டு எப்ஸ்டீன் பைல்ஸ் பொதுவெளிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார். அதாவது, ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் பெரியளவில் நட்புறவில் இருந்ததில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே டிரம்ப் இதை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. 2019இல் நியூயார்க் சிறையில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

Epstein Files: ரிலீஸ் செய்யப்பட்ட 3.5 மில்லியன் பக்கங்கள்

டிரம்ப் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த டிசம்பரில் சில பக்கங்கள் மட்டும் எப்ஸ்டீன் பைல்ஸில் இருந்து வெளியான நிலையில், நேற்று முன்தினம் சுமார் 3.5 மில்லியன் பக்கங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.  இதில் 2 ஆயிரம் வீடியோக்கள், ஒரு லட்சத்து 80 ஆயிரம் புகைப்படங்கள் அடங்கும். மேலும் எப்ஸ்டீன் பைல்ஸ் ரிலீஸ் செய்யப்படுவது இதுவே கடைசி என்றும் இதற்கு பிறகு எதுவும் ரிலீஸ் செய்யப்படாது என்றும் நீதித்துறை அறிவித்தது.

Epstein Files: ஆனால் உறுதிசெய்யப்படாத தகவல்...

வெளியிடப்படாத லட்சக்கணக்கான ஆவணங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்கள், சட்டப்பூர்வமாக பொதுவில் வெளியிட முடியாத முக்கியமான பதிவுகள் ஆகியவை உள்ளதாகவும், அதனால் இனி எக்காலத்திலும் அவை வெளிவராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பில் கேட்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளனர். இருப்பினும், எப்ஸ்டீன் பைல்ஸில் உள்ள எந்தவொரு கூற்றுகளும் உறுதிச்செய்யப்படாதவை மற்றும் தவறானவை என்று கூறியுள்ளது.

Epstein Files: டிரம்ப் மீது குற்றச்சாட்டு

டொனால்ட் டிரம்ப் நியூ ஜெர்ஸியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறுமியை வாய்வழி பாலியல் உறவுக் கொள்ள கட்டாயப்படுத்தினார் என தற்போது வெளியாகி உள்ள எப்ஸ்டீன் பைல்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண்ணின் கூற்றாக உள்ளது. தனது தோழியை டிரம்ப் வாய்வழி பாலியல் உறவுக் கொள்ள கட்டாயப்படுத்தியாக ஒரு பெண் தெரிவித்ததாக அந்த வாய்வழி பாலியல் எப்ஸ்டீன் பைல்ஸில் உள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 13-14 வயது சிறுமி என்றும் கூறப்படுகிறது. 

Epstein Files: டிரம்பை கடித்த சிறுமி

மேலும், வாய்வழி பாலியல் உறவுக் கொள்ள கட்டாயப்படுத்தியபோது டிரம்பை தான் கடித்ததாக அந்தப் பெண் அவரது தோழியிடம் கூறியிருக்கிரார். டிரம்பை கடித்து அவர் சிரித்திருக்கிறார் என்றும் அவர் சிரித்ததற்கு டிரம்ப் அந்த சிறுமியை முகத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், எப்ஸ்டீனால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அந்த பெண் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Epstein Files: ஆயிரக்கணக்கான முறை 

இதுமட்டுமின்றி, எப்ஸ்டீன் பைல்ஸில் ஆயிரக்கணக்கான முறை டிரம்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, டிரம்ப் புளோரிடாவில் உள்ள அவரது மார்-எ-லாகோ எஸ்டேட்டில் விருந்துகளை நடத்தியதாகவும், அதில் அவரது மனைவி இவாங்கா டிரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் கலந்து கொண்டதாகவும் எப்ஸ்டீன் பைல்ஸில் உள்ளது, அதன் புகைப்படங்களையும் காண முடிகிறது.

Epstein Files: மாயமான டிரம்ப் குறித்த பதிவுகள்

எப்ஸ்டீன் பைல்ஸ் மூலம் பொதுவெளியில் வெளியிடப்பட்ட டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை அடங்கிய பதிவுகள் மர்மமான முறையில் ஆன்லைனில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதன்பின் மீண்டும் அந்த பதிவுகள் ஆன்லைனில் தென்பட்டன. அதிகமான பதிவுகள் காரணமாகவே அவை காணமால் போனதாக அமெரிக்க நீதித்துறை அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Epstein Files: பொய் மற்றும் ஆதாரமற்றது...

எப்ஸ்டீன் பைல்ஸில் டிரம்பிற்கு எதிரான தவறான, பரபரப்பை ஏற்படுத்தும் கூற்றுக்கள் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது. "2020ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு FBI-யிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான உண்மையற்ற மற்றும் பரபரப்பான கூற்றுகள் எப்ஸ்டீன் பைல்ஸின் சில ஆவணங்களில் உள்ளன" என்றும் நீதித்துறையின் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவை ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இதில் சிறிதளவு நம்பகத்தன்மை இருந்தாலும் அவருக்கு எதிராக நிச்சயம் பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்" என்றார்.

மேலும் படிக்க | 'ஆட்சியை கவிழ்க்க ஆள் வருது!' - டிரம்ப் பற்ற வைத்த நெருப்பு! பதிலடிக்கு தயாராகும் ஈரான்

மேலும் படிக்க | இந்திய பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை... கணவனின் கொடூர செயல் - அமெரிக்காவில் பரபரப்பு!

மேலும் படிக்க | World News | கிரீன்லாந்து முதல் ஈரான் வரை... உலகை உலுக்கும் டொனால்ட் டிரம்பின் முடிவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News