G-20 Summit Controversy: தென்னாப்பிரிக்கா தலைமையில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது ஜி-20 நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா இனி ஜி-20 பட்டியலில் தொடர்ந்து இருக்கக் கூடாது என்றும், அங்கு நடப்பது மிகவும் மோசமானது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜி-20 மாநாட்டை டொனால்ட் டிரம்ப் புறக்கணிப்புக்கான காரணம் என்ன?, டிரம்ப்பின் குற்றச்சாற்றுக்கு தென்னாப்பிரிக்காவின் பதில் என்ன?, ஜி-20 மாநாடு மீது தாக்கம் ஏற்படுமா? போன்ற விவரங்களை பார்ப்போம்.
டிரம்ப் புறக்கணிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தென்னாப்பிரிக்க அரசு வெள்ளைச் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக ஆப்பிரிக்கர் சமூகத்தினருக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்பது டிரம்பின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இது மனித உரிமை மீறல்கள் மற்றும் வெள்ளை விவசாயிகளுக்கு எதிரான இன வன்முறை என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவங்களை "கம்யூனிச அட்டூழியங்கள்" மற்றும் "அடக்குமுறை சம்பவங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா மீதான அதிருப்திக்கான காரணங்கள் என்ன?
டிரம்பின் அதிருப்தி மனித உரிமை மீறல்கள் என்று கூறப்படுவதோடு மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாடு மற்றும் ஈரானுடனான அதன் வளர்ந்து வரும் உறவுகள், பிரிக்ஸ் நாடுகளின் மீதான பிணைப்பும் அமெரிக்காவிற்கு கவலையளிக்கிறது. இதை டிரம்ப் மேற்கத்திய கூட்டிற்கு எதிரான "துரோகம்" என்று கருதுகிறார். காசா நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா இனப்படுகொலை வழக்கைத் தாக்கல் செய்ததை டிரம்ப் எதிர்த்தார். இது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான "ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்று கூறினார்.
ஜி-20 மாநாட்டில் அமெரிக்க பிரதிநிதித்துவம் யார் வழிநடத்துவார்?
2025 நவம்பரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவிருக்கும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துக்கொள்ளவில்லை என்றாலும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் அமெரிக்க தூதுக்குழுவை வழிநடத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டிரம்ப்பின் குற்றச்சாற்றுக்கு தென்னாப்பிரிக்காவின் பதில்:
தென்னாப்பிரிக்க அரசு டிரம்பின் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளது. அவரின் கூற்று தவறானது மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்று விளக்கம் அளித்ததோடு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. மேலும் "வெள்ளை இனப்படுகொலை" என்ற கூற்று ஆதாரமற்றது என்றும், அமெரிக்கா தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் தென்னாப்பிரிக்க கூறியுள்ளது.
G-20 மாநாடு டிரம்ப் புறக்கணிப்பால் ஏற்படும் தாக்கம்:
- இந்த ஆண்டு G-20 உச்சி மாநாடு ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடைபெறுகிறது.
- அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகள் இதைப் புறக்கணிப்பது, வளரும் நாடுகளின் குரலை பலவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக கருதலாம்.
- டிரம்பின் முடிவு, தென்னாப்பிரிக்கா தலைமையிலான ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றுபட வழிவகுக்கும்.
- இதன்மூலம் "தெற்கில்" ஒரு புதிய அதிகார அமைப்பை உருவாக்கலாம்.
- தென்னாப்பிரிக்கா நாடு இனி G-20 இல் இருக்கக்கூடாது என்ற டிரம்பின் கூற்று சிக்கலை ஏற்படுத்தலாம்.
- டிரம்ப்பின் நடவடிக்கையால் G-20 எனபது "G-20 vs G-10" பிளவை நோக்கித் தள்ளக்கூடும்.
- இதில் ஒருபுறம் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளும், மறுபுறம் பிரிக்ஸ் மற்றும் உலகின் தற்கு நாடுகளும் அணி திரளலாம்.
- டிரம்ப் இல்லாதது அமெரிக்காவின் இராஜதந்திர தலைமையை பலவீனப்படுத்தும்.
- இந்த வாய்ப்பை சீனா, ஆப்பிரிக்க நாடுகளில் தனது பொருளாதார செல்வாக்கை வலுப்படுத்தப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க - 29 வயதில் ரூ.249 கோடிக்கு அதிபதியான இளைஞர்! ஒரே நாளில் மாறிய தலையெழுத்து..
மேலும் படிக்க - காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் முரட்டு சம்பவம் - டிரம்புக்கு நோபல் பரிசா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









