)
Donald Trump Tax On India: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவின் இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும் மற்றும் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூலை 30) அறிவித்தார்.
ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதுதான் வரியை அதிகரித்ததற்கான முக்கிய காரணமாக டிரம்ப் குறிப்பிட்டு பேசினார். மேலும் இரு நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக நீடிக்கும் வர்த்தக தடையும் காரணம் என்றார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது Truth Social சமூக வலைதளத்தில், "இந்தியா நமது (அமெரிக்காவின்) நட்பு நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நாம் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே செய்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே மிக உயர்ந்தவை அவைதான். மேலும் அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையான மற்றும் சகிக்க முடியாத நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ தளவாடங்கள், ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவில் இருந்தே இறக்குமதி செய்து வந்துள்ளனர். மேலும் சீனாவை போல் ரஷ்யாவின் எரிசக்தியை அதிகமாக வாங்கும் நாடாகவும் உள்ளது. உலகம் முழுவதும் ரஷ்யா உக்ரைனில் செய்து வரும் படுகொலையை நிறுத்த வேண்டும் என்று விரும்பும் நேரத்தில் - இவை எல்லாம் நல்லதல்ல!. அதனால், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியா 25% வரியை செலுத்த வேண்டும், கூடுதல் அபராதத்துடன்..." என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் ரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்னணுவியல் போன்றவை குறிப்பிடத்தக்க ஏற்றுமதி லாபங்களைக் கண்டவை ஆகும். தற்போது அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் இவற்றில் பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. ஜவுளி, ஆடை மற்றும் கல் பொருட்கள் போன்ற பாரம்பரிய துறைகள், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியில் சரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் பங்கு கடந்த 2024ஆம் ஆண்டில் 25% ஆகும். இது 2013ஆம் ஆண்டில் 8 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.
இந்தியாவின் ரசாயன ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இவை கடுமையாக பாதிக்கப்படலாம்.
இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் பல மாதங்களாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனற். ஆனால் இருதரப்பிற்கு இடையே இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்பது தெரிகிறது. அமெரிக்கப் பொருட்களை இந்தியச் சந்தையில் அதிக அளவில் கொண்டு வர வேண்டும் என்பது டிரம்பின் விருப்பமாக உள்ளது, அதற்கு அதிக அழுத்தமும் கொடுத்து வருகிறார்.
இதற்கு முன் கடந்த ஏப். 2ஆம் தேதி Reciprocal வரியை விதித்தபோது, இந்தியாவுக்கு 26% வரி சுமத்தினார். அப்போதும் இதே வணிக தடைகள் குறித்தும், ரஷ்யா உடன் இந்தியா வர்த்தக ரீதியில் இணக்கமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி வரி விதிக்கப்படுவதாக கூறினார். அதன்பின் பல்வேறு நாடுகளுக்கு அன்று விதிக்கப்பட்ட Reciprocal வரி நிறுத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவை நேரடியாக எச்சரித்த அமெரிக்கா! மாநாட்டில் நடந்தது என்ன?
zeenews.india.com/tamil/world/america-directly-warns-india-what-happened-at-the-israel-palestine-two-state-solution-summit-601851
மேலும் படிக்க | ரஷ்யா & ஜப்பானை சுருட்டிய சுனாமி..! பதற்றத்தில் 10 நாடுகள்..! இந்தியாவின் நிலை என்ன..!
zeenews.india.com/tamil/videos/massive-earthquake-shook-russia-japan-what-will-happen-to-india-602009
மேலும் படிக்க | விமானத்தில் திடீரென பற்றிய தீ! உயிரை பிடித்துக்கொண்டு ஓடிய பயணிகள்-வைரல் வீடியோ
zeenews.india.com/tamil/world/watch-video-american-airlines-plane-catches-fire-at-denver-airport-passengers-evacuated-quickly-601364
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ