Cyclone Ditwah Latest News: வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றதழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இலங்கை வழியாக தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலால், இலங்கை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் 80 பேர் பலி
கடந்த ஒரு வாரமாக இலங்கை கடுமையான வானிலை மாற்றங்கள் எதிர்கொள்ள தொடங்கியது. இந்த நிலையில், தற்போது இலங்கை பேரழிவை சந்தித்திருக்கிறது. இதன் காரணமாக 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்நாட்டு இந்தியா உதவிகரம் நீட்டி உள்ளது. 'ஆபரேஷன் சாகர் பந்து'யை தொடங்கி, கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் முன்னணி கப்பலான ஐஎன்எஸ் உதய்கிரி மூலம் முதன்மை நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
தமிழகத்தை நெருங்கும் புயல்
தற்போது டித்வா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தெற்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை (நவம்பர் 30) தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரங்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டித்வா புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.
சென்னையில் தொடங்கிய மழை
சென்னையை பொறுத்தவரையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்ய தொடங்கி உள்ளது. இது படிபடியாக அதிகரிக்கக்கூடும் என்றும் நாளை காலை புயல் கரையை கடந்த பின்னர் மெல்ல மெல்ல குறைந்து ஞாயிற்றுக்கிழமை வானம் வறண்டு காணப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: டித்வா புயல்.. எங்கே உள்ளது.. எப்போது தமிழகத்தை நெருங்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









