Elon musk shocking move: “ரிசர்ச்சர்” என்பது கல்வி உலகத்திலிருந்து வந்த பழைய பெயர் என எலோன் மஸ்க் கூறுகிறார். வகைபடுத்தும் போக்கை தவிர்த்து, அனைவரும் செயலில் பங்கேற்கும் இன்ஜினியர்களாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். OpenAI, SpaceX, Anthropic போன்ற நிறுவனங்களும் இதே போக்கை பின்பற்றி வருகின்றன.
xAI-ல் "ரிசர்ச்சர்" இல்லை:
xAI நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் கூறுகையில், இனிமேல் எங்கள் நிறுவனத்தில் "ரிசர்ச்சர்" (ஆராய்ச்சி பணியாளர்) என்ற பதவி இருக்காது. எல்லாரும் இன்ஜினியர் தான் என்கிறார். “ரிசர்ச்சர்” என்றால் சில பேர் யோசிப்பவர்களா, மற்றவர்கள் அதை செய்பவர்களா? அப்படின்னு இரு நிலைமையா தெரியும், அது தேவையில்லை. எல்லாரும் செயலில் பங்கேற்கிறவங்கதான், அதனாலே எல்லோருக்கும் ஒரே பெயர் – இன்ஜினியர்! சரியாக சொல்ல வேண்டும் என்றால் - அவர் தனது சமீபத்திய X பதிவில், “ரிசர்ச்சர் என்பது கல்வி நிறுவனங்களில் இருந்து வந்த பழைய பதவிப்பெயர். நாமெல்லாம் இன்ஜினியர்கள்தான்”
என்றார்.
SpaceX-ல் கூட "ரிசர்ச்சர்" இல்லை:
மஸ்க் மேலும் கூறுகையில், “SpaceX நிறுவனமே உலகின் பல ஆய்வகங்களை விட அதிக ஆராய்ச்சி செய்கிறது. ஆனால் எங்கேயும் யாரும் ‘ரிசர்ச்சர்’ என்று தங்களை அழைக்க மாட்டார்கள். அவர்கள் எல்லோரும் இன்ஜினியர் தான்.” அதாவது, உண்மையான மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை செய்வது இன்ஜினியர்களால் தான் என்றே அவர் வலியுறுத்துகிறார்.
OpenAI, Anthropic-லும் இதே போக்கு:
இது மட்டும் இல்லாமல், OpenAI நிறுவனமும் அதே போன்று "ரிசர்ச்சர்" மற்றும் "என்ஜினியர்" என்ற வேறுபாட்டை தவிர்க்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர்களான சாம் ஆல்ட்மன் மற்றும் பிரொக்மேன் கூறுகையில், “நாங்கள் தொழில்நுட்ப ஊழியர்களை ஒரே வகையாகவே பார்க்கிறோம். அதற்காக Member of Technical Staff என்ற புதிய பதவி பெயரை உபயோகிக்கிறோம்.” இந்த மாற்றம் தொழில்நுட்ப ஊழியர்களுக்கிடையிலான சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வருகிறது.
சுருக்கமாக:
- xAI-ல் இனிமேல் "ரிசர்ச்சர்" பதவி இல்லை, எல்லோரும் இன்ஜினியர் என Elon Musk அறிவிப்பு!
- “ரிசர்ச்சர்” என்றால் யாராவது யோசிக்கிறவங்க, மற்றவர்கள் செய்பவர்களா என தவறான பார்வை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
- SpaceX-ல் கூட யாரும் “ரிசர்ச்சர்” இல்லை – அனைவரும் செயலில் பங்கேற்கும் இன்ஜினியர்கள் தான்.
- பழைய கல்வி முறை நெறிப்படி வந்த “ரிசர்ச்சர்” என்ற பதவி இனிமேல் தேவையில்லை என Musk கூறுகிறார்.
- OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களும் தற்போது Member of Technical Staff என்ற ஒற்றை பதவியை பயன்படுத்துகின்றன.
- தொழில்நுட்ப துறையில் சமத்துவத்தை வலியுறுத்தும் புதிய கலாசாரம் இது எனவும் கூறப்படுகிறது.
- "Elon Musk-ஐப் போலவே, இப்போது ரிசர்ச்சர் என்ற தனிப் பதவிக்கு காலம் இல்லை!"
மேலும் படிக்க | சிறுவர்களுக்கான செக்ஸ் ஆப்! சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்... முழு விவரம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









