தாலிபான்களுக்கு பயந்து துணிக்கடை பெண் பொம்மைகளும் ‘மாஸ்க்’ அணிந்துள்ள அவல நிலை!

Taliban Rule in Afghanistan: சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்களில், துணிக்கடையில் இருக்கும் பெண் பொம்மைகளின் முகமும் தலையும் மறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

Last Updated : Jan 22, 2023, 01:11 PM IST
  • 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.
  • ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
  • துணிக்கடையில் இருக்கும் பெண் பொம்மைகளின் முகமும் தலையும் மறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
தாலிபான்களுக்கு பயந்து துணிக்கடை பெண் பொம்மைகளும் ‘மாஸ்க்’ அணிந்துள்ள அவல நிலை! title=

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்ததில் இருந்து பெண்களின் நிலை மோசமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களை ஒடுக்கும் வகையில் பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்கும், வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தாலிபான்களின் பயம் மிகவும் அதிகமாக இருப்பதால், கடைகளில் உள்ள பெண் பொம்மைகளின் முகங்கள் கூட மறைக்கப்படுகின்றன. சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்களில், துணிக்கடையில் இருக்கும் பெண் பொம்மைகளின் முகமும் தலையும் மறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தலிபான் அரசே இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அன்று முதல் பெண்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. இப்போது துணிக்கடைகளில் உள்ள பெண் பொம்மைகளின் முகமும் தலையும் மூடி வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள மேலும் சில படங்களில் பெண் பெம்மைகளின் தலையை முழுமையாக கருப்பு பாலிதீன் பயினால் கட்டி மூடியிருப்பதைக் காணலாம்.

மேலும் படிக்க | Taliban : பொதுவெளியில் தூக்கு... மீண்டும் அராஜகத்தை தொடங்குகிறதா தாலிபான்?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடைகளை வைத்துள்ள உரிமையாளர்கள் தாலிபான்கள் மீதுள்ள அச்சத்தினால் இது போன்ற உத்தரவுக்கு இணங்கியுள்ளனர். முன்னதாக, தலிபான் அரசாங்கம் கடைக்காரர்களிடம் பெண் உருவங்களை அகற்றுமாறு கூறியது. இல்லையெனில் அவர்கள் அனைவரும் மொத்தமாக தலை துண்டிக்கப்படுவார்கள் என மிரட்டியது. இப்போது தலிபான் உத்தரவு ஒவ்வொரு கடைக்காரரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதோடு, அவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளும் மிகவும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண் உரிமை என்பதே பெரும் கேள்விக்குரியாகியுள்ளது

காபூல் நகரின் கடைகளில், இப்போது பெண் பொம்மைகள் டிசைனர் ஆடைகளை அணிந்திருந்தாலும், அவற்றின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. சில கடைக்காரர்கள் தங்கள் முகத்தை அதற்கேற்ற வண்ண ஆடைகளால் மூடியுள்ளனர், சிலர் பாலித்தீன் பை மூலம் மறைத்துள்ளார்கள். சில இடங்களில் பெண் பொம்மைகளின் முகங்களை ஃபாயில் பேப்பரால் மூடியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நிறுவப்பட்டதில் இருந்து ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். தலிபான்கள் பெண்களின் கல்வியை நிறுத்தியதோடு, அவர்கள் வேலை செய்யவும், வீட்டிற்கு வெளியே வரவும் தடை விதிக்கபட்டது.

மேலும் படிக்க | பெண்ணுரிமைக்கு முன்னுரிமை இல்லை: தாலிபான் திட்டவட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News