ஜம்மு காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானின் நீர் ஆதாரமான சிந்து நதி நீரை நிறுத்தியது. அதேபோல் பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹாஹித் அப்ரிடி பகல்காம் தாக்குதல் தொடர்பாக பேசி உள்ளார். அவர் இந்திய அரசையும் இந்திய ராணுவத்தையும் கடுமையாக குற்றச்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் ஊடக செய்தியாளர்களிடம் அப்ரிடி பேசுகையில், பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சுமார் 1 மணி நேரம் நடந்துள்ளது. பயங்கரவாதிகள் மக்களை கொன்று குவித்தனர். 8 லட்சம் இந்திய ராணுவ வீரர்களில் ஒரு வீரர் கூட அந்த ஒரு மணி நேரத்தில் வரவில்லை. ஆனால் அவர்கள் வந்தபோது, பாகிஸ்தானை குற்றம் சாட்டினர். இந்தியா தனது சொந்த மக்களை கொன்றுவிட்டு பாகிஸ்தான் மீது பழிபோடுகிறது. எந்த நாடும் அல்லது மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை.
நாங்கள் அமைதியை ஆதிரிக்கிறோம். இஸ்லாம் நமக்கு அமைதியை சொல்லித்தருகிறது. பாகிஸ்தான் அத்தகைய செயல்களை ஒருபோதும் ஆதரிப்பதில்லை. இந்தியாவுடனான எங்கள் உறவை மேம்படுத்த நாங்கள் எப்போதும் முயற்சித்துள்ளோம். எங்கள் மதம் அமைதியை பற்றி பேசுகிறது. நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவை உருவாக்க முயற்சி செய்கிறோம். அங்கிருந்து எங்களுக்கு எப்போதும் அச்சுறுத்தல்கள் வந்தன. நாங்கள் அங்கு விளையாட செல்வோமா இல்லையா என்பது கூட தெரியாது.
2016 உலக கோப்பையின்போது நான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தேன். நாங்கள் லாகூரில் இருந்தோம். இந்தியாவுக்கு விமானத்தில் செல்ல முடியுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது. இந்தியாவின் கபடி அணி பாகிஸ்தான் வருகிறது. ஆனால் கிரிக்கெட் அணி வருவதில்லை. நீங்கள் பாகிஸ்தான் வரக்கூடாது என நினைத்தால் அதை முற்றிலுமாக நிறுத்துங்கள். இல்லை என்றால் அதை செய்யாதீர்கள் என அப்ரிடி பேசி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









