ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் கேன்சர்... எலும்பு வரை பரவிய புற்றுநோய்!

Joe Biden Prostate Cancer: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 19, 2025, 10:43 AM IST
ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் கேன்சர்... எலும்பு வரை பரவிய புற்றுநோய்!

Joe Biden Prostate Cancer: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் அவருக்கு முற்றிவிட்டது என்றும் அவரின் எலும்பு வரை பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

Joe Biden Prostate Cancer: எலும்பு வரை பரவிய புற்றுநோய்

இதுகுறித்து ஜோ பைடன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பைடன் சிறுநீர் அறிகுறிகள் மோசமடைந்து வந்ததாகவும் அதை தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு புரோஸ்டேட் கட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தக்கட்ட சோதனைகள் புரோஸ்டேட் புற்றுநோயை உறுதிப்படுத்தின. புரோஸ்டேட் புற்றுநோயின் தீவிரத்தை குறிக்கும் க்ளீசன் மதிப்பெண் 9 (கிரேடு குரூப் 5) ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் புற்றுநோய் எலும்பு வரை பரவியிருப்பதும் தெரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Joe Biden Prostate Cancer: குணப்படுத்த வாய்ப்புள்ளது

இந்த புற்றுநோயானது மிக கடுமையானதாக இருந்தாலும், இது ஹார்மோன் உணர்திறன் கொண்டது என கூறப்படுகிறது. அதாவது, இதன் சிகிச்சை பலனளிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதனால், இதை குணப்படுத்தலாம் என கூறப்படுகிறது. பைடன் தரப்பு அறிக்கையில், "இது நோயின் மிகவும் தீவிரமான வடிவத்தைக் குறிக்கிறது. என்றாலும், புற்றுநோய் ஹார்மோன் உணர்திறன் கொண்டதாகத் தெரிகிறது, இது பயனுள்ள சிகிச்சைக்கு அனுமதிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

82 வயதான ஜோ பைடன் அவரது உடல்நிலை முன்னேற்றம் காண்பதற்கு ஏற்ற மருத்துவ சிகிச்சையை நாடி உள்ளார். அந்த அறிக்கையில், "ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் அவரது மருத்துவர்களுடன் சிகிச்சை விருப்பங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Joe Biden Prostate Cancer: அதிபர் டிரம்ப் வருத்தம்

அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உறுதியாகியிருக்கும் செய்தியைக் கேட்டதும், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கவலை தெரிவித்தார். மேலும் பைடன் விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் போட்ட பதிவில், "ஜோ பைடனின் சமீபத்திய புற்றுநோய் பற்றி கேள்விப்பட்டு மெலானியாவும் நானும் வருத்தமடைந்தோம்.

ஜில் பைடன் மற்றும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் ஜோ பைடன் விரைவாகவும் வெற்றிகரமாகவும் குணமடைய வேண்டிக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜோ பைடன் 2021ஆம் ஆண்டில் இருந்து 2025ஆம் ஆண்டுவரை அமெரிக்க அதிபராக இருந்தார்.

மேலும் படிக்க | லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை... பாகிஸ்தானில் பயங்கரம் - யார் இந்த சைபுல்லா காலித்?

மேலும் படிக்க | 'நிர்வாணப் படங்கள்' 11 வயது மாணவனிடம் அத்துமீறிய பெண் - ஆசிரியர் செய்யும் வேலையா இது?

மேலும் படிக்க | 'ரூ. 4300 கோடி பாகிஸ்தானுக்கு நஷ்டம்' மோடி அரசு எடுத்த 'நச்' முடிவு - மொத்தமும் கிளோஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News